பக்கம்:வழுக்கு நிலம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ( ரா, சீனிவாசன் கைகள் அதனை அன்று தொடவும் விழையவில்லை. காப்பியை எடுக்கச்சென்ற அவன் கைகளும் மெல்லவே எடுத்தன. அதில் குடில்லாமல் ஆறி இருந்ததை எதிர்த்து அவன் மனம் புரட்சி செய்ய விரும்பவில்லை. என்றும் ஆபீசைப்பற்றி அதிகம் எண்ணாத அவன் மனம் அன்று ஆபீசைப்பற்றியே எண்ண ஆரம்பித்தது. அவன் வேலை செய்யும் அதே அறையில் டைபிஸ்டு சாரதா 'டைப் அடிக்கும் அந்தக் காட்சி அவன் மனக்கண் முன் அப்படியே வந்து நின்றது. மிகச் சுறுசுறுப்பாக அவள் கை விரல்கள் அசைவதும் அவள் கருவிழிகள் ஆழ்ந்து அதில் கவனம் செலுத்துவதும் அவன் கவனத்தை விட்டு அகலவில்லை. அதே சமயத்தில் ஆபீசுக்கு வெளியே நின்று அந்த ஈட்டிக்காரன் பேசும் பதற்றமான பேச்சு ஒவ்வொன்றும் ஈட்டி பாய்வது போலத் தோன்றியது. இல்லை. நாளைக்குத் தருகிறேன் என்று சொன்னால் என்ன? அவன் கேட்க மாட்டானே! அவன் வளைந்த மூக்கும் கூரிய விழிகளும் அச்சுறுத்துவது போல அவன் மனத்துக்குப்பட்டது. அந்த நிலைமையில் சாரதாவின் முன்னால் அவனால் அவமானப்பட்டால் என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான். அன்று ஆபீசில் உட்கார்ந்திருந்த சிவராமனுக்கு அன்று காலையில் தோன்றிய அச்சத்தோடு அன்றைய ஆபீசு வேலை துவக்கம் ஆக ஆரம்பித்தது. மேலே சுற்றிய மின் விசிறியின் காற்றின் அசைவினால் ஒரு சில காகிதங்கள் மேலெழுந்து பறக்க முயற்சித்தன. அவற்றை ஒருங்கே அடுக்கி அதன்மீது கண்ணாடிக் கல் ஒன்றை எடுத்து வைத்தான். அதில் இருந்த பூ வடிவம் தீட்டப் பெற்ற சித்திரத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் அந்தக் குறிப்பேடுகள் மீது செல்லவில்லை என்பது அவ்வேடுகள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்ததால் தெரிந்தது. காக்கி சட்டை அணிந்த பியூன் ஒருவன் அவ்வப் பொழுது உள்ளே தனியறையிலிருந்து அடிக்கும் மணியோசை கேட்டு உட்சென்று கையெழுத்திட்ட குறிப்பேடுகளை எடுத்து வருவதும் கொண்டு போய் வைப்பதுமாக இருந்தான். மற்றைய நேரங்களில் வெளியில் போட்டிருந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு நிம்மதியாகக் கண்களை மூடிக் கொண்டிருந்தான். அவன் போட்டிருந்த நாமத்தைக் கண்டால் உண்மையில் அவன் துரங்குகிறானா கண்மூடித் தியானம் செய்கிறானா என்று சொல்ல முடியாத நிலைமையில் இருந்தது. அடிக்கடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/62&oldid=898244" இலிருந்து மீள்விக்கப்பட்டது