பக்கம்:வழுக்கு நிலம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் , 61 மணியோசை கேட்டு அவன் விழிக்க வேண்டியிருந்ததால் கண்கள் சிறிது சிவந்திருந்தன. அவன் கையில் கசங்கி மடித்துக் கிடந்த செய்தித்தாள் அவன் கோட்டைப் போலவே கசங்கிக் கிடந்தது. அதைப் படிக்கும்பொழுது மட்டும் கொஞ்சம் சுறுசுறுப்பு அவனிடத்தில் தோன்றுவது போலக் காணப் பட்டது. மற்றைய நேரத்தில் அதை மடித்து அவன் கோட்டு ஜேபியில் போட்டு வைத்தான். மற்றும் சில குமாஸ்தாக்கள் அவரவர் தம் தொழிலைச் செய்த வண்ணம் இருந்தார்கள். தலைமைக் குமாஸ்தா தணிகாசலம் தன் புருவத்தை உயர்த்திய வண்ணமிருந்தார். ஆங்கிலோ இந்திய மாது ஒருத்தி டைப் எந்திரத்தின் பக்கத்தில் உட்கார்ந்து டைப் அடித்துக் கொண்டிருந்தாள். அவள் வாயிதழ்களில் பூசியிருந்த சிகப்பு நிறம் பளிச்சென்று தோன்றியது. அது சிறிதும் கலையாதபடி வாயை மூடிய வண்ணம் அவ்விரு இதழ்களும் ஒன்றையொன்று தழுவி யிருந்தன. வியர்வையால் கழுத்தில் இருந்த பவுடர் கலைந்து பார்க்க அருவருப்பாகத் தோன்றியது. கையில் அணிந்திருந்த சிறிய கடிகாரமும் கையோடு ஒட்டிக் கிடந்தது. சிலுவை தொங்கிக் கொண்டிருந்த மெல்லிய தங்கச் சங்கிலி மார்பில் மின்னிக் கொண்டிருந்தது. டைபிஸ்டு சாரதாவும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இந்த 'டைப்' அடிக்கும் எந்திரத்தின் ஒலிகள் மாறி மாறி அச்சமில்லாமல் ஆரவாரஞ் செய்து கொண்டிருந்தன. அவ்வப்பொழுது இடை இடையே அவை அமைதி கொள்ள ஆரம்பித்தன. சிவராமனின் சிந்தனை அன்று மாலை ஈட்டிக்காரன் வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றிச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவனுக்கு இருப்புக் கொள்ள வில்லை. தான் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். வெளியே முற்றத்திற்கு வந்தான். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் பிடித்தான். அதை விரைவில் பிடித்து முடித்து விட்டு மறுபடியும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் பியூன் அவனருகில் வந்தான். "ஐயா! சேட்ஜி உங்களைப்பார்க்க உள்ளே வரலாமா என்று கேட்கிறார். அவர் வெளியே நிற்கிறார்." அந்தப் பக்கத்தில் இருந்த டைப் எந்திரத்தைப் போலவே அவன் இதயம் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. கொலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/63&oldid=898246" இலிருந்து மீள்விக்கப்பட்டது