பக்கம்:வழுக்கு நிலம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 63 சாயுங்காலம்தான் வருவான். அதற்குள் முக்கியமான வேலைகளைச் செய்து முடித்து விட்டு வீட்டிற்குச் சீக்கிரம் கேட்டுக்கொண்டு போகலாம் எனத் தீர்மானித்தான். அவ்வப் பொழுது அவன் எழுதிய குறிப்புக்களைப் பியூன் வந்து எடுத்துக் கொண்டு போனான். மணிபர்சில் இருந்து இரண்டனா எடுத்துக் கொடுத்து "காப்பி வாங்கி வா" என்று கூறி அனுப்பினான். சிறிது நேரத்திற்கெல்லாம் காப்பி மேஜைக்கு வந்தது. அதை அவன் குடித்து விட்டுக் கண்ணாடிக் குவளையை மேஜை மேல் வைத்தான். பிறகு இடத்தைவிட்டு வெளியே வந்தான். வெளியே முற்றத்தின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்த வண்ணம் சிகரெட் பற்ற வைக்கத் தொடங்கினான். புகையை வாய் நிறைய இழுத்து மொத்தமாக விட்டான். வெளிப் பக்கத்தில் அவன் பார்வை விழுந்தது. வேகமாகச் சில கார்கள் "ஹார்ன்” அடித்துக் கொண்டு வருவதும் போவதுமாயிருந்தன. பாதிரிப் பெண்கள் சிலர் உடம்பு முழுவதும் மூடிக் கொண்டு ஒரே மாதிரி நடந்து சென்றனர். சொறி பிடித்த நாய் ஒன்று தெருவோரமாய் ஒதுங்கி நடந்து சென்றது. அங்கே ஒரே குப்பையாகக் கிழிந்த கடிதங்களும், பக்கத்திலிருந்த அரச மரத்தின் உதிர்ந்த இலைகளும் குவிந்து கிடந்தன. அங்கு விழுந்து கிடந்த துண்டுச் சிகரெட்டைச் சோம்பேறிப் பையன் பற்ற வைத்துக் கொண்டிருந்தான். அவன் கட்டியிருந்த வேட்டி காவியேறிப் போயிருந்தது. அவன் முகம் எண்ணெய்ப் பசையோடு மந்தமாக இருந்தது. அதற்குப் பக்கத்தில் இருந்த கட்டிடத்தின் ஒதுக்கமான மேட்டில் உட்கார்ந்திருந்த ஆள் மீது அவன் பார்வை சென்றது. அவனுடைய பார்வை சிவராமனின் ஆபீஸ் வாசற்படியை நோக்கிய வண்ணம் இருந்தது. சட்டென்று சிவராமன் சிறிது பின்பக்கம் ஒதுங்கினான். வேறு வழியில்லை. தனக்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தான். ஆம் என்று சொல்லுவது போல் அரச மரத்தின் இலைகள் காற்றால் அசைந்து சலசலத்தன. அந்த மரத்திலிருந்து விழுந்த சில இலைகளோடு கடுதாசிகள் ஒரு குப்பையாக ஒதுங்கிக் கிடந்தன. அந்தக் குப்பையின்மீது வெற்றிலை பாக்கு மென்று உமிழ்ந்த கரை இன்னும் சரியாகக் காயாமல் மினுமினுத்துக் கொண்டிருந்தது. சிவராமனுக்கு இன்னது செய்வது என்று தெரியவில்லை. கையிலிருந்த துண்டு சிகரெட்டைக் கீழே போட்டான். அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/65&oldid=898250" இலிருந்து மீள்விக்கப்பட்டது