பக்கம்:வழுக்கு நிலம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ரா. சீனிவாசன் சாம்பல் சிதறிக் காற்றில் பறந்தது. அவன் எண்ணமும் இன்னது செய்வது என்று தெரியாமல் சிதறியது. மறுபடியும் தன் மேஜை அருகில் போய் நாற்காலியில் உட்கார்ந்தான். அந்த மேஜை மேல் இருந்த குறிப்பேடுகள் சலனமில்லாமல் கிடந்தன. அவனுடைய உள்ளமும் உணர்ச்சியற்ற இயந்திரத்தைப் போல மறுத்துப் போய் இருந்தது. வாழ்க்கை கசந்து விட்டது. சாரதாவின் டைப்மிஷின் மட்டும் அடித்துக் கொண்டே இருந்தது. அவ்வப்போது வரியின் முடிவில் தள்ளும் போது சிறிது நிறுத்தி அதன் பிடியைத் தள்ளுவதும் பக்கம் முடிந்ததும் மாற்றுவதுமாக இருந்தாள். அடுத்த ஏடுகளைக் குண்டுசியால் குத்தி வைத்து ஒழுங்குபட வைத்துக் கொண்டிருந்தாள். நெறித்த புருவத்தோடு தலைமைக் குமாஸ்தா ஏதோ ஆழ்ந்து சிந்திப்பவரைப் போலக் காணப்பட்டார். அவ்வப்போது அடித்துக் கொண்டிருந்த "கூப்பிடு மணியைக்" கேட்டு ஆபீஸ் சேவகன் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தான். சிவராமனுக்கு வேலைமீது கவனம் ஒடவில்லை. ஏதோ பொருளற்ற பார்வ்ையோடு ஆபீசைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் விழிகளுக்குப் புதிதாக வேலைக்கு வந்த காரணத்தால் சாரதாவினிடம் இருந்த சுறுசுறுப்பும், வேலை செய்து மறுத்துப் போன தலைமைக் குமாஸ்தாவின் பொறுமையும், இயந்திரம் போலக் கூப்பிட்ட மணிக்கு உட்சென்று வெளிவந்து கொண்டிருந்த ஆபீஸ் சேவகனின் கடமை உணர்ச்சியும், ஒழுங்காக ஓய்வு சாய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தின் ஒட்டமும் எல்லாம் இயற்கையாய் அமைந்துவிட்டவை போலத் தோன்றின. அவர்கள் செய்யும் வேலைகளில் தனக்கும் ஒன்றும் தொடர்பு இல்லாததைப் போல் அவனுக்குத் தோன்றியது. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்பதில் அவன் சிந்தனை ஆழ்ந்தது. கடிகாரம் யாரையும் கேட்காமல் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. மணி ஐந்து அடிப்பதை நோக்கி அதன் முள் இயங்கிக் கொண்டிருந்தது. அது சாதாரணமாகத் தன் நடையிற் சென்றாலும் தலைமைக் குமாஸ்தாவைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் அது மெதுவாகவே இயங்கு வதைப் போல் இருந்தது. அவருக்கு வயதின் காரணமாகவும் கடமையே பொழுது போக்கு என்ற கொள்கையின் காரணமாகவும் அந்தக் கடிகாரம் ஒழுங்காகத்தான் போகிறது என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/66&oldid=898252" இலிருந்து மீள்விக்கப்பட்டது