பக்கம்:வழுக்கு நிலம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 67 அவள் ஒன்றும் எதிர்பேசாமல் இருந்தாள். அவனுக்கு ஏன் அவளைக் கேட்டோம் என்று ஆகிவிட்டது. அதற்குள் அந்த பியூன் சிறிது கனைக்கத் தொடங்கினான். அந்தக் கனைப்பில் ஏதோ ஒரு தனிப்பொருள் இருந்ததைப் போல சாரதாவுக்குத் தோன்றியது. சிவராமன் இருந்த இடத்தைவிட்டு எழுந்தான். ஆபீஸ் குறிப்பேட்டை எடுத்து வைத்துவிட்டு வெளியே புறப்படத் தொடங்கினான். படிகட்டு இறங்கும் நிலையில் அவனுடைய கால்கள் அடியெடுத்து வைக்க மறுத்துவிட்டன. அப்படியே அசைவற்றுச் சிறிது நேரம் நின்று விட்டான். "தொடராத கதையைப் போல எதிலும் அப்படி அப்படியே நின்று விடுகிறீர்களே." "கதையின் தொடர்ச்சியைக் கொண்டு போக முடியாத தால்தான்." "ஏன் கதையமைப்பில் பெரிய சிக்கல் ஏதேனும்." "எவ்வளவோ சிக்கல்கள். வெளியே எதிர்க் கட்டிடத்தின் ஒரத்தில் நின்று கொண்டிருக்கிறானே அவன்தான் என் கதையில் இப்பொழுதைய சிக்கல்." சாரதா வெளியே எட்டிப் பார்த்தாள். கையில் கனத்த பிரம்பொன்று வைத்து அசைத்துக்கொண்டிருந்த காபூலி வாலாவைக் கண்டாள். தானே முயன்று கற்றுக்கொள்கிற கணக்கைப் போல் தெளிவாகி விட்டது. "அவனுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும்?" "இப்பொழுது வட்டி மட்டும் முப்பது ரூபாய் கொடுத்தால் அவன் போய்விடுவான்." சட்டென்று தன்னுடைய கைப்பையிலிருந்து முப்பது ரூபாய் - மூன்று நோட்டுகளை எடுத்துக் கொடுத்தாள். கனவில் வாழ்கிறோமா என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவில்லை. சாரதா கொடுப்பது உண்மையான நோட்டுகள்தாம் என்று நன்றாகத் தெரிந்தன. அந்த ஈட்டிக் காரன் சாதாரணப் பொருளாக அவன் மனத்தில் காட்சி யளித்தான். அவன் கால்களில் ஒரு புதிய உணர்வு தோன்ற ஆரம்பித்தது. டிக்கட் கொடுப்பதற்காக நிறுத்தப்பட்ட பஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/69&oldid=898258" இலிருந்து மீள்விக்கப்பட்டது