பக்கம்:வழுக்கு நிலம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ( ரா. சீனிவாசன் திடீரென்று புறப்படுவது போல இருந்தது அவன் நடையின் வேகம். நன்றி கலந்த உணர்வோடு அவளைப் பார்த்தான். ஏதோ ஒன்று கலந்த உணர்வோடு அவள் விழிகள் இவனைச் சந்தித்தன. அதற்குள் ஆபீஸ் கதவுகளை மூடி விட்டு 'கல் கல்' என்ற சாவியோசையோடு ஆபீஸ் பியூன் படிகட்டு நோக்கிக் கீழே நடந்தான். அவனுக்கு அவன் படிக்கும் பத்திரிகையின் நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போலவும் சனிக்கிழமை இரண்டாவது ஆட்டம் எப்பொழுதாவது சென்று பார்க்கும் காதல் கட்டத்தின் காட்சிகளில் ஒன்றைப் போலவும் அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும். அதனால் தான் கீழேபோய் அவர்களை மீண்டும் பார்க்காதவனைப் போல ஒருவமுறை பார்த்துவிட்டு மெல்ல நடந்து சென்றான். ஆபீஸ் மாடி அறையை விட்டுத் தரையில் சிவராமன் இறங்கி வந்ததும் அப்பொழுதுதான் அவனைச் சந்திக்க வந்ததைப் போல அந்த ஈட்டிக்காரன் முன்வந்து குறுக்கே நின்றான். "இந்தா முப்பது ரூபாய் வட்டிக்கு வைத்துக்கொள்" என்று சொல்லிக் கொடுத்தான். தபால் கடிதம் கொடுத்து விட்டுச் சைக்கிளில் ஏறிச்செல்லும் தபால்காரனைப் போல பற்றில்லாமல் சென்றுவிட்டான். நகரத்தின் கூட்டத்தோடு கூட்டமாக அவனும் ஒருவனாகக் கலந்து விட்டான். வழக்கம் போல் கார்கள் வருவதும் போவதுமாக இருந்தன. எதிரேயிருந்த அச்சகத்தார் வேலை விட்டுவிட்ட படியால் வரிசை வரிசையாகத் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வீடு நோக்கி நடந்தார்கள். தன்னோடு பக்கத்தில் சாரதா நின்று கொண்டிருந்ததை அவன் மறக்கவில்லை. "உங்கள் பணத்தை." "அதைப்பற்றிக் கவலையில்லை. நிதானமாகக் கொடுங்கள்.” சாரதா பஸ் நிலையத்தை நோக்கி நடந்தாள். சிவராமனும் அவளோடு பின் நடந்தான். பிராட்வே சந்திப்பில் வண்டிகள் நெருங்கிச் சென்று கொண்டிருந்தபடியால் இருவரும் சிறிது நேரம் நிற்கவேண்டியிருந்தது. அங்கேயிருந்த வெள்ளைச் சட்டைப் போலீஸ்காரன் தடுத்து நிறுத்தினான். பிறகு சிறிது நேரம் பொறுத்து வழிவிட்டான். அதில் நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/70&oldid=898262" இலிருந்து மீள்விக்கப்பட்டது