பக்கம்:வழுக்கு நிலம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 69 சென்றவர்கள் கவலையில்லாமல் மெதுவாக நடந்து சென்றனர். சிவராமனும் சாரதாவும் சட்டக் கல்லூரியின் நடை பாதையை அடைந்து விட்டார்கள். அந்த நடைபாதையில் ஒருவன் ஜோசியம் சொல்லிக் கொண்டிருந் தான். அவன் சொல்லுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் தலையையசைத்துக் கொண்டு சுமார் முப்பது வயதுள்ள ஒரு வாலிபன் உட்கார்ந்திருந்தான். அதற்குப் பக்கத்தில் ஓர் அம்மையார் அடுத்துக் கேட்பதற்குப் பொறுமையாக உட்கார்ந்து கொண்டிருந்தார். அவன் முன்னால் கைரேகைகள் போட்ட படம் ஒன்று இருந்தது. அவன் நெற்றியில் குங்குமப் பொட்டுச் சிறிது அகலமாக வைத்துக் கொண்டிருந்தான். மங்கலான நிறமுடைய பழைய கோட்டு ஒன்று அவன் போட்டிருந்தான். அவன் உட்கார்ந்த இடத்திற்குப் பக்கத்தில் சிறிது தொலைவில் சில சட்டிப் பானைகள் கல்லடுப்பின்மீது அங்கொன்றும் இங்கொன்று மாகக் கிடந்தன. கறுப்பு நிறமுடைய குழந்தையொன்று கிழிந்த மூங்கில் தட்டியில் அமைதியாகப் படுத்துத் துரங்கி கொண்டிருந்தது. அக்குழந்தையின் தாய் சுள்ளிகளை எடுத்து அடுப்பு எரித்துக் கொண்டிருந்தாள். "நீங்கள் எந்த எண் பஸ் ஏறவேண்டும்?" "ஒன்பது பத்து எதில் வேண்டுமானாலும் போகலாம்." "நானும் பதினைந்தாம் எண் பஸ்தான் ஏறவேண்டும். பஸ் நிலையம் வரையில் உங்களோடு துணையாக வருகிறேன்.” "அதற்கப்புறம்” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று பேச்சை மாற்றத் தொடங்கினாள். "இன்னும் கொஞ்சம் இருந்தால் அந்த சைக்கிள்காரன் அந்தக் காரில் மோதியிருப்பான்" என்று சற்று வேகமாகத் திரும்பிய சைக்கிளைச் சுட்டிக் காட்டிப் பேசினாள். அவள் பத்தாம் எண் பஸ்ஸில் ஏறினாள். அவள் ஏறிய சிறிது நேரத்திற்கெல்லாம் அதுவும் நகர்ந்தது. சிவராமன் 15-ஆம் எண் பஸ் நிலையம் நோக்கி நடந்தான். 10 பார்வதியின் மனம் உவகையில் ஆழ்ந்தது. தானும் சிவராமனும் நடத்தும் இல்லற வாழ்வின் நன்மைகளையும் இன்பத்தையும் எண்ணி அவள் மனம் மிகவும் இலேசாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/71&oldid=898264" இலிருந்து மீள்விக்கப்பட்டது