பக்கம்:வழுக்கு நிலம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ரா. சீனிவாசன் இருந்தது. மறுபடியும் அவள் மனம் சென்னையில் தன் கணவன் அகத்தை நோக்கிப் பறந்து சென்றது. அவர் ஆபீசுக்குச் சென்று வரும்பொழுது முன்னெல்லாம் வாங்கி வரும் புதிய சேலைகளும் சில்க் ஜாக்கட் துணிகளும் அவள் கவனத்துக்கு வந்தன. களைத்து அலுத்து வரும் அவர் முன்னால் காப்பிக் குவளையை முன்கொண்டு நீட்டினால் அவர் விடும் புகையைப் போல் அவர் மனம் எவ்வளவு இலேசாக இருந்தது என்பதை அவள் எண்ணிப் பார்த்தாள். மறுபடியும் தொண்டு செய்ய அவள் மனம் அவனைச் சுற்றி வந்து நின்றது. "ஏன் எப்பொழுது வந்தாய் பார்வதி?” "பணம் பத்தாயிரம் என் பெற்றோர்கள் கொடுத்து விடுவார்கள். நம் வாழ்வு இனிப் பழையபடி பொலிவடையும்." "ஒகோ! இந்தச் செய்தி சொல்லவா நீ வந்தாய்?" "ஆம். எங்கள் அப்பாவும் அண்ணனும் பேசிக் கொண்டார்கள். அதை உற்றுக் கேட்டேன். அதைச் சொல்லத்தான் ஒடோடி வந்தேன்." "பார்வதி! இங்கே வா!' அவன் அன்புக்கரங்கள் அவளை அணைக்கச் சென்றன. பார்வதி அப்படியே உள்ளம் குழைந்தாள். "இன்று நானும் உங்களோடு படத்துக்கு வரட்டுமா!" "ஓ! இதோ, சீக்கிரம் தயாராகி விடு. இனிமேல் உனக்கு ஒருவித தொல்லையும் கொடுக்க மாட்டேன். உனக்கு நிரம்ப கஷ்டம் கொடுத்து விட்டேன். உன் மனத்தை மிகவும் நோகச் செய்து விட்டேன் பார்வதி! என்னை மன்னித்து விடு. நான் என்ன செய்வது. என் பணக்கஷ்டம் உன்னை இப்படி யெல்லாம் நோகச் செய்து விட்டது. உங்கள் அப்பாவும் தங்கமானவர். அவர் மனத்தை அறியாமல் அவசரப்பட்டு ஏதோ சொல்லி விட்டேன். அவர் நல்ல எண்ணம் உடையவர். பார்வதி! ஒகோ நீ இல்லையா உன் நெஞ்சை ம்டடும்தான் அனுப்பி வைத்தாயா?” "ஆமாம். பார்வதி வருவதற்குக் கொஞ்ச நேரம் ஆகும். சில நாட்களில் வந்து விடுவாள். அதற்குள் விரைவாக இந்தச் செய்தியைச் சொல்ல நான் ஒடோடி வந்தேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/72&oldid=898265" இலிருந்து மீள்விக்கப்பட்டது