பக்கம்:வழுக்கு நிலம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 71 இவ்வாறு பார்வதியின் மனம் எண்ண ஆரம்பித்தது. அந்த எண்ணத்தில் தன்னை மறந்தவளாகப் படுக்கையை விட்டு எழாமலே இருந்தாள். "எட்டு ஆகியும் தூக்கமா" என்று தட்டி எழுப்பிய பிறகுதான் தனக்கு முன்னால் தன் அன்னை நிற்பதை உணர்ந்தாள். கண்களை விழித்து அகலமாகப் பார்த்தாள். "என்ன பார்வதி! இன்று அப்பாவோடு நீயும் புறப்பட வேண்டும்.” "அண்ணன்கூட வரவேண்டும். அப்பொழுதுதான் நானும் போவேன்.” "முதல்முதலில் அண்ணன் போகக்கூடாது. அது நமக்குப் பழக்கமில்லை." அதற்குள் பல்துலக்கிக் கொண்டிருந்த மாணிக்கமும் கையில் பிரஷ்ஷோடு அந்தப் பக்கம் வந்தான். "பார்வதி! நீ போ. நீ பார்த்து விட்டு வந்தால் போதும்." "அம்மாவைப் போல நீயும் சுத்த கருநாடகமாக இருக்கிறே அண்ணா!" "இல்லை. நான் யாருக்கும் தெரியாமல் அந்தப் பக்கம் போகிறாப் போல எப்படியும் பார்த்து விடுவேன்.” "அது தெரியும் அண்ணா! அண்ணி உன்னைப் பார்க்க வேண்டுமே. அதற்காகத்தான் உன்னையும் வரச் சொல்லுகிறேன்." "சரி! அப்பா குறுக்கிடாமல் இருந்தால் வருகிறேன்." இருந்த சரிகை போட்ட புடைவையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். காப்பி நிறப் புடைவைக்கு ஈடு செய்வது போலச் சாம்பல் நிற ஜாக்கட் உடுத்துக் கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று தலையை வாரிக்கொண்டு நெற்றியில் சிவந்த பொட்டு இட்டுக் கொண்டாள். இன்னும் தனக்குப் பழக்கமான ஒப்பனையெல்லாம் செய்து கொண்டாள். "ஏன் தங்கச் சங்கிலி எங்கே?' என்று கேட்ட வண்ணம் அந்த அறைக்கு அவள் அன்னை வந்தாள். "அப்பா செய்த அவசரத்திலே அங்கேயே பெட்டியில் வைத்து வந்து விட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/73&oldid=898266" இலிருந்து மீள்விக்கப்பட்டது