பக்கம்:வழுக்கு நிலம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 0 ரா. சீனிவாசன் "சரிதான். அப்பாவுக்குத் தெரிந்தால் எரிந்து விழப் போகிறார்" என்று சொல்லிய வண்ணம் தன் கழுத்தில் இருந்த சங்கிலியை மகள் கழுத்தில் போட்டு வைத்தாள். மாணிக்கமும் புதிதாகப் பட்டம் பெற்ற விழாவிற்குத் தைத்து வைத்திருந்த சூட்டை இப்பொழுது போட்டுக் கொண்டு கண்ணாடியின் முன்னால் வந்து நின்றான். "எப்படி! பார்வதி!" "அப்படியே அண்ணி சொக்கி விழுந்து போய் விடுவாள்." "அப்பொழுது நீதான் தண்ணிர் தெளித்து எழுப்ப வேண்டும்.” அதற்குள் அவன் தந்தை அந்தப் பக்கம் வந்தார். "ஏன்'டா! நீ கூடவா வரப் போகிறாய்?" "இல்லேப்பா போட்டோ ஒன்று பிடித்துக் கொள்ளப் போகிறேன். அதற்குத்தான்." "ஏன் அண்ணா! நீ வரவில்லையா! அப்பா! அண்ணா வையும் வரச்சொல் அப்பா!" "சரிதான் வந்து தொலை. இதிலே வேறு பொய் சொல்ல வேண்டுமா ?” அவனும் ஒன்றும் பேசாமல் புறப்பட்டான். வெளியே காத்துக் கொண்டிருந்த மாட்டு வண்டியில் மூவரும் ஏறி உட்கார்ந்தார்கள். மாட்டு வண்டி, 'கல் கல்' என்ற ஒலியோடு புறப்பட்டது. சாலையோரத்தில் ஓங்கியிருந்த மரத்தின் நிழல் சாலையில் பரவி எங்கும் குளிர்ச்சியாக இருந்தது. அந்தக் குளிர்ச்சி நிறைந்த சாலையில் வண்டி போகும்பொழுது ஏதாவது சினிமா பாட்டு ஒன்று பாடலாமா என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அப்பா பக்கத்தில் இருந்ததனால் வாய் மூடிக் கொண்டான். - மல்ல ஆடி அசைந்து அவ்வண்டி சென்றது. தொட் லில் குழந்தையை வைத்து ஆட்டுவதுபோல இருந்தது அவ்வ னடியின் அசைவு. ஆடி அசைந்து வரும் யானையைப் போ வைக்கோல் வண்டி ஒன்று சிறிது தூரத்து இருந்த பால வழியாக வந்து கொண்டிருந்தது. அதன் உயரத்தில் உட்க ந்திருந்த ஆள் யானையின் பிடரியின்மீது உட்கார்ந்து செல் ம் பாகனைப் போலக் காட்சியளித்தான். வயலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/74&oldid=898268" இலிருந்து மீள்விக்கப்பட்டது