பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. § { அங்கம்-2, காட்சி-4 97 கண்டேன். இதெல்லாம். உண்மையானல்-நினைக்க நெஞ்சம் நடுங்குகின்றதே... (அரசன் புகுகிருன்.) பாண்டி : தேவி என்ன இப்படி வாடியிருக்கிருய்? ஏன் கண்கள் நீர் சுரக்கின்றன? என்ன நடந்தது? ஏன் அழு கின்ரு ய்? - அரசி என் அன்பிற்குரிய அரசே! என்ன சொல்வேன்? ஐயோ! இன்று விடியலில் கண்ட கனவு என்னை வாட்டு கின்றதே. பாண்டி : பேதைப் பெண்ணே! கனவுக்காகவா இப்படிக் கலங்குவது! நன்முக இருக்கிறது. பாரெல்லாம் ஆளும் பெருமன்னன் தேவியா இப்படி நடுங்குவது? யாராவது பார்த்தால் சிரிக்கப்போகிருர்கள். - அரசி : இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? உங்களுக்கு எல்லாம் விளையாட்டுத்தான். உங்கள் பரம்பரையில் முன்னெருநாள் என்போன்ற தலைவியின் கனவு எப்படி நனவானதென்பது நீங்கள் அறியாததா அதிலும் நீங்கள் வரவர அந்த வாதவூரரின் பக்கம் மேற் கொள்ளும் செயல்-பெருஞ்சாத்தன் பேச்சின்படி செய் யும் செயல்-நடுக்கத்தையே உண்டாக்குகிறது. மக்கள் இவைபற்றியெல்லாம் பேசுவதையும், தங்கள் புகழ் ஓங்குவதற்குப் பதில் குறைவதையும், என்னைச் காட்டி லும் ஒற்றரால் உற்றறியும் தாங்கள் நன்கு அறிவீர்கள். பாண்டி : அறிவேன். என்ருலும் எத்தனையோ சூழ்நிலை களுக்கிடையில் அரசியல் செல்ல வேண்டியுள்ளது. இதி லெல்லாம் நீ தலையிடவேண்டாம். நீ காணும் கனவு பற்றியும் யாதொன்றும் கவலைப்படவும் வேண்டாம். ஆமாம்! அவ் வாதவூரரை நாம் விடுதலை செய்து மறுபடி யும் அமைச்சராக இருக்கவேண்டினலும், அவர் 'மாட்டேன்' என்கிருரே; அதற்கு என்ன செய்வது? வ.-7