பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3 காட்சி-3 பாண்டிமாதேவி : (தனித்து) அங்கயற்கண்ணி அம்மையே! என்ன இத்தனை கொடும் கனவினை உண்டாக்கிவிட்டாய்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? வழிவழியாகத் தொண்டு செய்யும் எங்கள் மரபை நீ அறியாயா? மனமறியத் தவறு இழையா மரபல்லவா இது! கண்ட கனவை எண்ணில்ை நடுக்கமுண்டாகின்றதே. நாட்டிலே வெள்ளப் பெருக்கா? வீட்டிலே குடிமுதல் இழப்பா? மீளும்பிகைத் தாயே! ஏதோ சில நாட்களாகவே எனக்கு மனம் வாட்டமாகவே இருக்கிறதே. காரணம் என்ன? வாதவூரரைப் பற்றிய வதந்திகள் அதிகமாக அதிகமாக என் வாட்டமு மல்லவா அதிகம்ாகின்றது. என் செய வல்லேன்? அவர் அரசியலில் அமைச்சர் பதவி ஏற்ற பிறகு பலவகையில் நாடு ஏற்றமுற்றுள்ளது என உலகமே உணர்கின்றதே. ஆனல், அவரை வீழ்த்தப் பலவகையில் இந்தப் பெருஞ்சாத்தன் முயல்வதும் அறிந்ததே. அரசர் ஏனே சில நாட்களாக இப்பெருஞ்சாத்தன் வலையில் சிக்கி விட்டார்? நான் சொல்வதைக்கூடக் கேட்க வில்லையே. வாதவூரர் மனம் அறிந்த மன்னரே இப்படி மாறினல் இனி யார் அவரைத் திருத்துவது? ஆனால், நேற்று அந்தக் குதிரைகளைக் கண்டபின் அரசர் மனம் மாறிவிட்டார் என அறிந்து மகிழ்ந்தேன். அம் மகிழ்ச்சியை நினைக்கும் அதே வேளையில், ஏனே இந்த அதிகாலையில் இத்தகைய கொடுமையான கனவு நிகழ வேண்டும்? ஐயோ ஆண்டவனே! சொக்கேசா! இம் மதுரை நெருப்பால் அழிந்ததை நெடுநாட்களுக்குமுன் மக்கள் கண்டார்கள். ஆனல், இன்று என் கனவில் நீரால் சூழப்பெற்றதாக அன்ருே இருந்தது! அது மட்டுமா? அத்துடன் என் குலக்கொழுந்து-ஒரு குலத்துக்கு ஒரு மைந்தன்-அவனை அவ் வெள்ளம் விழுங்கிவிட்டதாகக்