பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3, காட்சி-2 95 பாண்டி : அமைச்சர் பெரும! தாங்கள் இன்றி நான் எப்படிச் சிறக்கச் செயலாற்ற முடியும்? இடையில் ஏதோ நடந்த இந்த மாற்றத்தை எண்ணித் தாங்கள் என்மேல் வெறுப் புக் கொள்ளலாகாது. ஏதோ சூழலும் மற்றவர் உரை களும் பிறவும் என்னை இந்த நிலைக்கு உள்ளாக்கிவிட்டன. தாங்கள் தயவுசெய்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்று நடத்தவேண்டும். தாங்கள் வந்தபின் என் நாட்டில் உண்டான நன்மைகளை நானறிவேன். பெருந் துறையில் உள்ள கோயிலுக்கு இன்னும் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும் நானே முன்னின்று செய்துவைக்கிறேன். தாங்கள் மட்டும் என் வேண்டு கோளை ஏற்று அருள்புரிய வேண்டும். மாணி : அரசர் பெருமl தாங்கள் இவ்வாறு என்னை ஒரு பொருட்டாக எண்ணி வேண்டுவது தகாது. நான் சென்ருல் எத்தனையோ நல்ல.அமைச்சர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள். இதோ இந்தப் பெருஞ்சாத்தர் இல்லையா தங்களுக்கு? - பெருஞ் : பெரும! அப்படிச் சொல்லலாகாது. தாங்கள் அரசர் பெருமான் விருப்பப்படி இருந்து பாண்டி நாடு சிறக்க வேண்டிய வழித் துறைகளே ஆய்ந்து எங்கட்கு உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். பாண்டி : ஆம்! நான் தங்களை மன்ருடிக் கேட்டுக்கொள்ளு கிறேன். - மாணி : பாண்டி மன்னரே! தயவு செய்து இனி அது மட்டும் வேண்டாம். பெருஞ் : தற்போது அவருக்கு ஒய்வு கொடுங்கள். அவர் தளர்ந்திருக்கிரு.ர். நாளை தங்கள் விருப்பிற்கு இசைவார். பாண்டி : உண்மைதான். தாங்கள் எண்ணிச் சொல்லுங் கள். நான் சென்று வருகிறேன். - (பாண்டியன் செல்கிருன்: கூடவே பெருஞ்சாத்தரும் செல்கிரு.ர்.)