பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வழுவிலா மணிவாசகர் (வாதவூரர் வர, அவர் கையைப் பிடித்துக்கொண்டு) அமைச்சர் பெருமானே! அறியாது செய்த பிழையினை மன்னிக்கவேண்டும். மாணி : மன்னர் பெரும தாங்கள் அவ்வாறு சொல்லலாமா? என்ன நடந்துவிட்டது? ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்? பாண்டி : தாங்கள் ஒன்றும் அறியீர்களா?. தாங்கள் கூறிய படியே ஆவணி மூலத்தன்று-இன்று-குதிரைகள் வந்து விட்டன. எவ்வளவு அழகாக இருந்தன தெரியுமா? நீங்களே சென்று அவற்றைப் பார்வையிட்டு வருகிறீர் களா? மாணி : மன்னவர் பெரும! இருக்கட்டும் ஆண்டவன் கருணையே கருணை அரசே! தங்கள் அன்பும் பண்பும் என்னை என் சொற்படி நடக்க வைத்தன என நம்பு கிறேன். பாண்டி : அமைச்சர் பெரும! என் பிழையைப் பொறுத்துத் தாங்கள் அமைச்சர் பதவியினை ஏற்றுக்கொண்டு சிறக்கச் செயலாற்ற வேண்டும். - மாணி : அரசே! நான் என்ருே அப் பதவியை வேண்டா மென்று ஒலை விடுத்தேனே. அதுவும் தங்கள் கைக்கு வந்து சேரவில்லையா? பாண்டி : அதுவும் - என்றல் வேறு ஏதாவது அனுப்பினர் களா? - . (பெருஞ்சாத்தன் முகத்தில் மாறுதல் நிகழ்வதைக் 5676) என்ன பெருஞ்சாத்தரே! ஏன் இப்படி உங்கள் முகம் மாறுதலடைகின்றது? மாணி அரசர் பெரும அவரிடம் ஒரு மாற்றமும் இல்லையே. நான் இப் பதவியிலிருந்து விடுதலைபெற விழைந்த ஒலை அனுப்பினேன். அது சேரவில்லை போலும்!