பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3, காட்சி-2 93 பாண்டி : ஏன்? நான் செய்த தவறு போதாதா? இன்னுமா அவரைச் சிறையிலடைத்து வைப்பது? அவரை உடன் விடுவித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாமா? பெருஞ் : தலைவ! தாங்கள் அவ்வாறு செய்வது தவறு! தாங்கள் பெருமன்னர், நாங்கள் உங்கள் அடிமைகளே யன்ருே! - பாண்டி : இருக்கலாம். எப்படியாயினும் நான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டல்தானே முறை-தன் குறைக்கு உயிரையேவிட்ட பரம்பரையில் நான் தவறு செய்யலாமா? தவறு என்று அறிந்தும் வாளா இருக்க லாமா? இதோ வந்துவிடுவார். அது கிடக்கட்டும். அந்தக் குதிரைகளைப்பற்றித் தங்கள் கருத்தென்ன? பெருஞ் : நான் சொல்லுவதற்கு என்ன இருக்கின்றது? தங்கள் கருத்துத்தான் என் கருத்தும். குதிரைகள் மிக அழகாக இருக்கின்றன. அக் குதிரைச் சேவகன் தாங்கள் கூறியபடி கருவம் பிடித்தவகைவே காண்கின்றன். அவன் வந்த மிடுக்கும், சென்ற செலவும், தாங்கள் கொடுத்த மரியாதையை ஏற்றுக்கொண்ட வகையும், அம்மம்ம! சொல்ல முடியவில்லை. ஏன்? அவனைப் போலவே அவன் ஆட்களும். பாண்டி : அமைச்சரே! அது கிடக்கட்டும்! அவன் தோற்றத் தைக் கண்டீர்களா? பெரிய மன்னர் வீட்டு மகனைப் போன்ற களைபொருந்திய முகத்தோடு அல்லவா தோன்றினன்? அவன் எங்கும் கூடாரமிட்டுக்கூடத் தங்க வில்லையே! எங்கே சென்று விட்டிருப்பான்? . பெருஞ் : அரசே! நான் முதலில் சொன்னபடி அனைத்திலும் ஏதோ சூது நடந்திருக்கிறது. பொறுத்துப் பார்க்கலாம். கோயில் கட்டியது உண்மையா? குதிரைகள் வந்தது உண்மையா? பாண்டி : என் வரையில் இரண்டும் உண்மைய்ே (துரத்தில் வாதவூரர் வர) அதோ அவரே வந்து விட்டார். அனைத்தையும் கேட்டறியலாம்.