பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வழுவிலா மணிவாசகர் அரசி அதற்கு யோசனை சொல்ல நான் தயாராக இல்லை. ஆனல், அவரில்லாவிட்டால் மட்டும் நாட்டில் நன்மை வளராது என்று சொல்லுவேன். பாண்டி அதை உண்ர்ந்துதானே அவரை இருக்கச் சொல்லு கிறேன். - அரசி. தெரிகிறது என்ருலும், நீங்கள் எதிலும் எண்ணிச் செயலாற்றவேண்டும். கண்ட கனவு நிகழ்ந்தால் நாடே வெள்ளக் காடாகிவிடும். எண்ணுங்கள்; எண்ணிச் செயலாற்றுங்கள். - (தூரத்தே பேரொலி கேட்கிறது.) என்ன அங்கே ஆரவாரம்? இதுவரை இப்படிப்பட்ட பெருங்கூச்சல் எழுந்ததில்லையே! பாண்டி : ஆம்; உணர்கிறேன். ஏதோ பேராரவாரமாகவே இருக்கிறதே! (காவலன் ஓடி வருகிருன்.) காவ: அரசே! மோசம் மோசம்! பாண்டி : என்ன? நாட்டு மக்களே கூடியுள்ளார்கள். குதிரைக் கொட்டிலின் ஆட்கள் அனைவரும் வாசலில் வந்துள்ளனர். - (பதறுகிருன்) பாண்டி : என்ன? என்ன? அவசரப்படாமல், சொல். காவ அரசே குதிரைகளெல்லாம் இரவிே நரிகளாகி விட்டனவாம். பாண்டி : நேற்று வந்த குதிரைகளா? காவ ஆம் அரசே! அந்தக் குதிரைகள் எல்லாம் நரிகளாகி, உள்ள பழைய நம் குதிரைகளையும் கடித்துக் கொன்று, ஊரிலும் பெருஞ்சேதம் உண்டாக்கிக் காட்டிற்கு ஒடி விட்டன. - அரசி என்ன? என்ன? என்ன உளறுகிரும்? காவ அன்னையே! அனைத்தும் உண்மையே.