பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3, காட்சி-3 99 பாண்டி : அப்போதே நினைத்தேன்! பெருஞ்சாத்தனும் ஏதோ சூது என்றுதான் சொன்னன். பின் ஏது இங்கே இவனுக்கு இவ்வளவு பொருள்? குதிரை வாங்கவும்ஆம், அதே வேளையில் கோயில்கட்டவும்...காவலரை உடனே சென்று அவனைச் சிறைசெய்யச் சொல்லும். பெருஞ்சாத்தனைப் பழநிக் கொற்றனுடன் வரச் சொல்லுங்கள். இதோ, நானும் குதிரைக் கொட்டிலுக் குப் புறப்பட்டுவிட்டேன். அரசி : அரசர் பெரும! சற்றுப் பொறுங்கள்-சிந்தியுங்கள். அவசரப்பட்டு அவரைச் சிறைசெய்ய வேண்டாம். நான் கண்ட கனவு முன்னமே என்னை வாட்டுகிறது. இந் நிகழ்ச்சி அதற்கேற்ப அமைகின்றது. குதிரைகள் நரி களாவதாவது -என்ன விந்தை? பாண்டி : இதில் விந்தை என்ன இருக்கிறது, இதோதான் நடந்தைச் சொல்லுகிருர்களே! ஏதோ சூதுதான். அந்தக் குதிரைச் சேவகர் தலைவனைக் கண்டபோதேஅவன் என்னிட்ம் நடந்துகொண்ட முறையைப் பார்த்த போதே ஐயம் கொண்டேன். அரசி : கொற்றவா! எல்லாம் உண்மையாக இருக்கலாம் உங்கள் முன்னேரையே, இதோ தெரியும் ஆலவாய்க் கோயிலில் எழுந்தருளியுள்ள அண்ணல், எத்தனை வகை ய்ாக அடித்தடித்து ஆட்கொண்டு ஆடல்காட்டியுள் ளார். ஒருவேளை இதுவும் அவற்றுள் ஒன்ருகலாம். எதையும் சித்தித்துச் செயலாற்றுங்கள். பாண்டி : (கோபமாக) இது அரசகாரியம்; இதில் நீ தலையிட வேண்டாம். எது நல்லது எது கெட்டது என்பது எனக் குத் தெரியும். புரியாததைப் புரியவைக்க அமைச்சர்கள் உள்ளார்கள். உன் யோசனை எனக்குத் தேவையில்லை.