பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வழுவிலா ம்ணிவசகர் இந்நேரம் அவனைக் கைதுசெய்திருப்பார்கள். அமைச்சர் களும் வந்திருப்பார்கள். நான் வருகிறேன். அரசி : அரசே! சற்றுக் கோபம் தணியுங்கள். எண்ணிச் செயலாற்றுங்கள். பாண்டி சரி சரி வருகிறேன். (விரைகிருன்.) அரசி : சொக்கேசா மீளுட்சி! நீதான் இந்த நிலையில் எங் களைக் காப்பாற்றவேண்டும். குதிரைகள் நரியாவதாவது: எல்லாம் உன் ஆடலோ? யாண்டும் நிறைந்த இறை வனே! உன்னையே நம்பியுள்ள இந்த மக்களையும் மன்ன ரையும் காப்பாற்றுவாங்.