பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வழுவிலா மணிவாசகர் 'உற்ருரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் . - பேர்வேண்டேன் கற்ருரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்ருலத் தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' எனப் பாடினர். எவ்வளவு பொருள் பொதிந்த பாட்டு? மூன்ரு அட! அவர் பாடல்களை நீ கற்றுக் கொண்டாயா? இரண் : நான் மட்டுமா? இந்த நாட்டில் எத்தனையோ பேர் அவர்தம் அருட்பாடல்களைப் பrடிப் பாடிக் கண்ணிர் உகுக்கின்ருர்கள் என்பதை நீ அறியாயா? அது இருக் கட்டும். இனி அரச்ன் என்ன செய்யப் போகிருன்? மூன்ரு: என்னசெய்வான்-இந்தப் பாவிகள் சொற்கேட்டு, அவரைச் சிறையிலிட்டு வேறு கொடுமைகள் ஏதேனும் செய்வான். இவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? முதல் : உண்மைதான். அதிலும் மணிவாசகர் புகழ் உலகில் பரவத் தொடங்கிய பிறகு அவன் உள்ளப் புழுக்கம் மிக அதிகமாகிவிட்டதென அறிகிருேமே. அவன் கோபத் தைத் தூபம் போட்டு வளர்க்க அக்கொடியவர்கள் வேறு கூடியுள்ளார்களே! இரண் : ஆமாம்: ஆகா நம் நாட்டு நலம் இத்தகைய கொடுமையாளரிடம்-குடிகேடியாகிய பரத்தையோடு வாழும் பாபியிடமா சிக்கிச் சீரழியவேண்டும்? எத்தனை உயர்வாக வாழ்ந்தது பாண்டிய நாட்டுப் பண்பாடு இன்று இப்படி நிலை கெடுகிறதே. ஆமாம்; பாண்டியன் இன்னும் மாணிக்கவாசகரை விட்டா வைத்திருக்கிருன்? இருக்கமாட்டானே!