பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4, காட்சி-1 103 மூன்ரு உனக்குத் தெரியாதா? எப்போதோ? அவரைக் கைது செய்ய உத்தரவிட்டுவிட்டாளும். மேலும் ஏதோ செய்ய ஏற்பாடுகள் செய்கிருளும். (ஒருவன் வேகமாக ஓடிவருகிருன்.) என்ன முத்தண்ணன் இப்படி ஓடிவருகிருன். அவன் முகம் இப்படி மாறுபடுகிறதே. முந்தண் : அநியாயம் அநியாயம்! கொடுமை கொடுமை! கேட்க நல்லவர் இல்லையா ஊரீர் முறையோ சேரீயிர் முறையோ! முதல் : என்ன முத்தண்ணு? என்ன நடந்துவிட்டது? ஏன் பதறுகிருய்? - முத்த மாணிக்கவாசரை இந்தக் கொடிய வெய்யிலில் வையைப் பெருமணலில் இட்டுப் புரட்டுகிருர்களே! இரண் : அடப் பாவிகளா ஏன் இந்தக் கொடுமை: மூன்ரு : ஏதோ நாட்டுக்குக் கெட்ட காலம்தான். அன்று ஒருநாள் முன்பின் யோசியாத காரணத்தால் மதுரை நகர் தீக்கிரையானது. இன்று என்னகப் போகிறதோ? முதல்: பாவம்; இந்தக் கொடுவெய்யிலில் வையை மணல் அவர் உடலைச் சுட்டெரிக்கவில்லையா! அவர் பாவம் வாடி வதங்கவில்லையா! முத்த அதுதான் இல்லை. இந்தக் காவலாளிகள் ஆ ஊ' என்று கூச்சலிட்டு, வெம்மைக்கு ஆற்ருது அலமறுகின் முர்கள். ஆனல் அவரோ கண்மூடி மெளனியாக இருக் கிருர். திடீரென ஆண்டவனே நோக்கிப் பாடுகிரு.ர். அவர் உள்ளமும் முகமும் கலங்காதிருப்பதைக் காண, அவர் எல்லாவற்றையும் கடந்த கடவுள் நிலை பெற்றவர் என அறியமுடிகின்றது. அங்கே பெருங்கூட்டம் கூடி