பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4,காட்சி-1 105. முதலா : ஆம்: மணிவாசகர் என்னஞர்? காவலர் என்ன ஞர்கள்? அவர் தப்பிவிட்டாரா? அல்லது வெள்ளத்தில் அடித்துப் போகப்பட்டாரா? (மற்ருெருவர் ஓடி வருகிறர்.) தம்பி எங்கிருந்து வருகிருய்? வந்த : மணிவாசகரை வாட்டிய அந்த இடத்திலிருந்து தான் ஓடி வருகிறேன். முத்த : அப்படியா அவர் என்னஞர்? வந்த அவரா! அவர் எதற்கும் கலங்க்வில்லை. அவர் மெல்லத்தான் நடந்துவந்தார். வெள்ளம் அவருக்கு வழிவிட்டது போலும். அலை எழுப்பி 'ஒ'வென்ற இரைச்சலுடன் லருகின்ற வெள்ளம், அவர் பக்கத்தில் செல்லும்போது எப்படித்தான் அடங்கிச் செல்லுகிறது! ஆம்; அவர் மெள்ளக் கரையேறி மீட்ைசி சுந்தரேசர் கோயிலை நோக்கிச் செல்லுகின்ருர். (மேலும் கூச்சல் அதிகமாகின்றது) அன = வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட்டது. கடைத் தெருப் பக்கம் வந்துவிட்டது போலும். அதுதான் அங்கிருந்து பலர் இப் பக்கம் ஒடி வருகின்றனர். முத்த இதுவரை பாண்டியநாடு இத்தகைய வெள்ளத் தைப் பார்த்திருக்க முடியாதே. முதல் எப்படிப் பார்த்திருக்கும்? இத்தகைய கொடுமை இதுவரையில் பாண்டிய நாட்டில் நடந்ததுண்டா? இரண் : ஆம்; உண்மைதான். மாணிக்கவாசகரைப் புரிந்து கொள்ளாத மன்னன் அவன்ரத் துன்புறுத்துகிருன். மூன்ரு போகட்டும். இன்னியாவது புத்தி வருமா? பரி. நரியின் மாயம்-வெய்யிலில் மழை இன்றிப் பெரு வெள்ளம். இவற்றைக் கண்டாயினும் பாண்டியனுக்குப் புத்தி வருமா?