பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4, காட்சி-2 {ốề இறை : அடடே கண்டு பிடித்துவிட்டாயே! யாரும் காணக் கூடாத-காணமுடியாத உண்மையைக் கண்டு பிடித்து விட்டாயே. . வேலை 2 : டே அவன் நம்மைக் கிண்டல் செய்கிருன் பார்த் தாயா? வா, நம் வேலையைப் பார்க்கலாம். ஐயா, நீ போ. எங்களைத் தொந்தரவு செய்யாதே! i இறை : நான் ஒன்றும் செய்யவில்லையே. நீங்கள்தானே என்னப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்கள்? என்ன வென்று கேட்கவந்தால் ஏதேதோ பேசுகிறீர்கள்! உங்கட்கு என்னைப்பற்றி ஏன் கவலை? சரி சரி; உங்க ளோடு பேசிக் கொண்டிருப்பதைக்காட்டிலும், அதோ, அந்த மரத்தின் கீழ்ச் சென்று சற்று இளைப்பாறிலுைம் நல்லது. . (சென்று, தூரத்தில் உள்ள மரத்தடியில் கூடை யைத் தலையணையாக்கிப் படுத்துக்கொள்ளுகிரு.ர். அரசன் சேவர்கள் தூரத்தே வருகிருர்கள்.) வேலை 1 : அண்ணே! அவன் எவ்வளவு மதம் பிடித்தவகை இருக்க வேண்டும். ஊரே வெள்ளத்தால் அஞ்சுகிறது. அவன் ஒன்றும் அறியாதவனைப்போல் உறங்கத் தொடங்கி விட்டானே! வேலை 2 : டே, நீ அதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண் டிருக்காதே. அதோ, அரசன் ஆட்கள் வருகிருர்கள். உன் வேலையைப் பார். யாரோ அமைச்சர்கூட வருகிருர் போல் தெரிகிறதே. வேலை 1 ஆம்; ஆம். எல்லோர் வேலையும் முடிந்துவிட்டது போலும், நம்முடையதும் இந்தப்பக்க வெள்ளம் இல்லை யால்ை எப்போதோ முடிந்து விட்டிருக்குமே. (அமைச்சர் அரசன் ஆட்களுடன் அருகில் வந்து) அம்ை : யார் இந்தப் பங்கை அடைப்பது? ஏன் இன்னும் முடியவில்லை?