பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வழுவிலா மணிவாசகர் வேலை 2 : இதோ முடித்து விடுகிருேம். இந்தேரம் முடிந்து விட்டிருக்கும். ஆனல் பக்கத்துப் பங்கு அடைபடாத தால், அந்த வெள்ளம் எங்கள் பங்கையும் கல்லிக் கொண்டே வருகிறது. அமை : (சுற்றிப் பார்த்து) ஆமாம் உண்மைதான். அது யார் பங்கு? அதை அடைக்க ஆள் இல்லையா? கணக் (கணக்கைப் பார்த்து) அது வந்தி எனும் கிழவியின் பங்கு. அதற்கென ஒர் ஆள் வந்துதானே கணக்கில் குறிக்கவும் சொன்னன். வேலை 1 : ஆம் ஐயா: ஓர் ஆள் வந்தான். ஆனல் வேலை செய்யவில்லை. பிட்டினை உண்டுகொண்டே பொழுது போக்குகின்ருன். ஆடுகிருன்; பாடுகிருன்; குதிக்கிருன்என்னென்னவோ விளையாடலைச் செய்கிருன். அமை : ஆமாம்: இப்போது ೧ ಹG5 அவன்? வேலை 2 : அதோ, அந்த மரத்தின் கீழே படுத்துக்கொண் டிருக்கிருன், பாருங்கள். கணக் அட பாவி: ஊரே அலறுகிறது. அவன் உறங்குகிருன். அமை : பேச நேரமில்லை. வாருங்கள்; நாமே அவனிடம் சென்று விசாரிப்போம். (அனைவரும் இறைவன் படுத்திருந்த மரத்தடி யில் சென்று அவரை எழுப்ப முயல்கின்றனர். ஆனல், அவர் அசைந்து அசைந்து படுக்கிருரே அன்றி எழுந்திருக்கவில்லை.) அமை : என்ன இது கொடுமை! இப்படி வெள்ள ஆரவாரத் திடையில் கூலியாளாக வந்தவன் இப்படித் தூங்குவதா? கணக். இதோ பிரம்பு; இவனைத் தட்டி எழுப்புங்கள்.