பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வழுவிலா மணிவாசகர் அமை : அதைத்தான் தங்களிடம் சொல்லக் காவலரை அனுப்பினேன். இது வந்தியின் பகுதியாம். (அரசர் கணக்கனைப் பார்க்க) கணக் ஆம் வந்தியுடையது. சற்று முன் அதோ...(திரும்பு கிருர். உறங்கின இடத்தில் காணவில்லை)-(மறுபக்கம் திரும்பி) அந்த ஆள் தானே வந்து வந்தியின் ஆள் என்று கணக்கில் குறிக்கச் சொன்னன். ஆனல், வேலை செய்ய வில்லை; விளையாடுகிருன். எல்லோரையும் கேளுங்கள். (அரசன் திரும்ப) அனை ஆம், ஆம்; அரசர் பெரும! அசர ஏன்? அவனை அழைத்துக் கேட்பதுதானே? அன்ம கேட்டோம். பலமுறை எழுப்பிளுேம். அவன் அந்த உறக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. அடிப்பதற்கும் அச்சமாக இருந்தது. உங்கட்குக் காவலர்வழிச் செய்தி அனுப்பினேம். இப்போதுதான் எழுந்து கூடையில் மண் எடுத்துச் செல்லுகிருன். - வேலை 1 : ஆமாம் ஆமாம்: ஒழுங்காக அவன் மண் வாரிக் கொட்டி இதுவரை காணவில்லை. தாங்கள் வருவதால் தானே என்னவோ மண்ணை வாரிக்கொண்டு ஒழுங்காகச் செல்லுகிருன். அசர : அப்படியா! அவனை அழையுங்கள். (சீற்றத்துடன்) அடே இங்கே வா! (இ ைற வ ன் ஒடுங்கினவராகக் கூடை மண்ணுடன் அரசன் முன் வர) நீ யார்? வ்ந்தியின் ஆளா நீ ஏன் இப்படி வேலை செய்யாதிருக்கிருய்? உன்னல் எல்லா வேலையும் கெடு கின்றதே!