பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4, காட்சி-2 113 அன.: ஆமாம், ஆமாம்; வெள்ளம் மிகுந்து ஊரையே அழிக்கும்போலும். யார் நீங்கள்? இறை : என்ன கேட்கிறீர்கள்? என்னைத் தெரியவில்லையா? நான் எத்தனை எத்தனை காலமாக இங்கே இந்த ஊரில் குடும்பத்தோடு தங்கியிருக்கிறேன் என்னை யார் என்று கேட்கிறீர்களே? அரச : ஏது பெரிய வாயாடியாய் இருப்பான்போல் தெரி கிறதே! நீ யாராகவாவது இரு. ஏன் இன்னும் கரையை அடைக்கவில்லை? கரை உடைந்து மற்றவர் கட்டியதை யும் உடைப்பது உன் கண்ணுக்குத் தெரியவில்லை? இறை : யாருக்குக் கண் தெரியவில்லை? நன்ருகப் பாருங்கள். அரச என்ன? எனக்கா கண் தெரியவில்லை? வேலை செய்யவு மில்லை; எதிர்த்துப் பேசுவது வேரு? - (கையிலுள்ள பிரம்பால் இறைவன் முதுகில் ஓங்கி, அடிக்கிருன் இறைவன் அந்தக் கூடை மண்ணை உடைப்பில் கொட்டி மறைகிருர்-வெள்ளம் வற்றிப் பழையபடி ஆறு மணலாகின்றது.) அரச : ஐயோ அடி முதுகில் அடி தாங்க முடியவில்லையே. அமை : ஐயோ முதுகில் அடி. (ஒவ்வொருவரும் அவ்வாறு முதுகைத் தடவிக் கூச்சலிடுகின்றனர். ஊரில் கூச்சல் கிளம்பிவிட்டது -முதுகில் அடி-எங்கும் பேச்சு.) அரச : இது என்ன விந்தை ஆள் எங்கே? அடி அனைவர் மேலும் பட்டதென்ன? வெள்ளம் எங்கே? இனி என்ன விளையுமோ? சொக்கேசா? எல்லாம் உன் விளையாடலா? ஒன்றும் அறிந்துகொள்ள முடியவில்லையே-- (கதறி அழுகிருன். வானிலே இறைவன் உமை, குமரன் சூழத் தோன்றிப் பேசுகிரு.ர்.) வ.-8 . --