பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வழுவிலா மணிவாசகர் வானெலி : பாண்டிமன்ன! யார் கண் தெரியவில்லை என்ப தைப் பார்த்தாயா? இனியாவது விழித்துக்கொள். என் அடியவகிைய மாணிக்கவாசகனை என்னென்ன துன்பத் துக்குள்ளாக்கிய்ை. அவன் பொருளால் கோயில் கட்டிப் பேரும் புகழும் பெறுவதைக் கண்டு பொருமையால் அமைச்சர் தூபமிட அவனைச் சிறை செய்தாய். அவன் பொருட்டு நாமே நரிகளைக் குதிரைகளாக்கிக் குதிரை களுடன் குதிரைச் சேவகய்ை வந்து, பின் நாமே அவற்றை நரிகளாக்கினுேம். அப்போதும் உன் கண் திறக்கவில்லை. அமைச்சர் பேச்சில் சிக்கிய்ை; அவனைத் துன்புறுத்திய்ை; வெய்யிலில் வாட்டிய்ை: வையை வெள்ளம் பெருகச் செய்து வந்தியின் ஆளாய் வந்து அவளுக்கும் வீடளித்து இதோ விளையாடல் காட்டி ளுேம். நீ என்னை அடித்த அடி அவரவர் முதுகில் மட்டும் பட்டதாக எண்ணுதே. அவரவர் செய்த கொடுமைகளுக்கேற்ப அவரவர் வாழ்வில்-வயிற்றில் மனைவி மேல்-மற்றெல்லாவற்றிலும் பட்டுள்ளது. ஆம்: அவரவர் செய்த வினையினை அவரவர் அனுபவிக்க வேண்டும். அவற்றை நீக்குதற்குரிய ஒரே வழியாகிய என்னை நினைக்க மறந்தீர்கள். உரிய தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அனுபவித்தே தீரவேண்டும். யார் யார் என்னென்ன தண்டனை பெற்ருர்கள் என்பது இனித் தெரியும். நீயும் தப்ப முடியாது. பதவியாலும் பட்டத்தாலும் பிற உயர் நிலைகளாலும் மற்றவரை வாட்டும் யாரும் என்றும் அதற்குரிய தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்றைய நிகழ்ச்சியிலிருந்தாவது இந்த உண்மையை உணர்ந்து உலகம் திருந்துமா? மாணிக்கவாசகரை அப் பெயர் சொல்லி அழைக்க வும் நீ கூசிய்ை. அவன் மணிமொழி கேட்டு யாமிட்ட பெயரது. அவன் உள்ளத் தூய்மை உடையவன். பெருந்துறைக் கோயில் அனைத்தும் அவன் பொருள் கொண்டானது. இதை உலகம் உணரட்டும். அவன்