பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1 காட்சி-3 (மாணிக்கவாசகர் காவலருடன் உரையாடிக் கொண் டிருக்கிருர்). மாணிக்கவாசகர் : காவலர்களே! கடற்கரையில் யவனர்கள் நல்ல குதிரைகளுடன் வந்திருக்கிரு.ர்களல்லவா? நாம் உடனே சென்று கண்டு வரலாமே. காவலர் : அண்ணலே! பல வெளிநாட்டுக் கலங்கள்அதிலும் யவன நாட்டுக் கலங்கள் பல உள்ளன: அவற்றுள் சில குதிரைகளும் ஏற்றி வந்தனவாம். மாணி : ஆம். அப்படி வரும் என்றுதான் அரசர்பிரான் சொன்னர். அதற்காகத்தானே நாம் வந்திருக்கிருேம். உடனே சென்று கண்டு நல்லனவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு நாடு திரும்புவோமா? ஆம் விரைவில் இப் பணிய்ை-என் கடமையை முடித்துவிட்டு, அரச னிடம் குதிரைகளே ஒப்படைத்துவிட்டு, நான் விடுதலை, பெறவேண்டும்-பெற்று ஆண்டவன் கட்டளைப்படி பணி செய்யவேண்டும். என்ன? ஏன் தயங்குகிறீர்கள்? காவலர் : அண்ணலே! நல்ல குதிரைகளைக் கொண்டுவந்தன கலங்கள்-என்ருலும், அவற்றுள்ளே-பலகுதிரைகள் வழியிடை உண்டான குறைக்காற்றினத் தாங்க மாட்டாது கடல் கொந்தளிப்பில் அகப்பட்டு மாய்ந்து விட்டனவாம். எஞ்சி உள்ள சில குதிரைகளும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கின்றனவாம். யவன நாட்டு மக்களே இந்தத் தகவலைச் சொன்னர்கள். - மாணி : என்ன? அப்படியா? ஐயோ! நாட்டிலே நல்ல புரவிகள் இல்லை. வந்த குதிரைகளும் இவ்வாறு நிலை கெட்டு விட்டனவே! அரசருக்கு என்ன பதில் சொல்லு வது? நாட்டில் வேற்று நாட்டுப் படையெடுப்போ வேறு