பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 3-காட்சி , اتفاقی கொடுமைகளோ நேர்ப்தால் என்ன செய்வது? அரச னுக்கு இதை எப்படிச் சொல்லுவது? ஆமாம்! விரைவில் வேறு குதிரைகளேற்றிய கலங்கள் வருகின்றனவா எனக் கேட்டீர்களா? காவலன் ஆம்; அதுவும் கேட்டோம். மிக அண்மையில் அத்தகைய கலன்களை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்ருர்கள். மாணி : ஆண்டவனே! என்ன இது? இனி என் செய்வது? இந்தச் செய்தியை எப்படி என் பாண்டிய மன்னனுக்கு எடுத்துச் சொல்லுவது? அத்துடன் நானும் உடன் அவன் பணியிலிருந்து விடுதலை பெற்ருக வேண்டும். ஆம்; எந்தப் பற்று வேண்டாம் என்று என் குருநாதர் கட்டளையிட்டாரோ அந்தப் பற்று இன்னும் விடாது போலிருக்கிறதே. காவலரே என்ன செய்யலாம்? காவலர் : உடன் திரும்பிச் சென்று மன்னருக்கு உள்ள நில்ை யைச் சொல்லிக் குதிரை வாங்கக் கொண்டுவந்த செல்வத்தையும் அவர் பண்டாரத்தே சேர்த்து விட லாம். நாம் ஏன் இதைத் தாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்? மாணி : நல்லது அப்படியே செய்வோம்! நானும் அரசனி டமிருந்து விடுதலை பெற்று ஆண்டவன் பணி செய்யப் புறப்படலாம். வாயிற்காவலன் : அமைச்சர் பிரானே! வெளியில் பெருஞ் சாத்தரும் பழநிக் கொற்றரும் வந்துள்ளார்கள். வரச் சொல்லலாமா? மாணி : ஆம் (இருவரும் வர) வருக! நல்ல வேளையில் வந்து சேர்ந்தீர்கள். உட்காருங்கள். இருவரும் : வணக்கம். பெருஞ் : என்ன தல்ைவரே! ஏன் சோர்ந்து காணப்படுகிறீர்?