பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி : யார் சொன்னது? இன்னும் சில நாட்களில் வேறு குதிரைகள் வருவதாக என்னிடம் யவன வீரர்களே சொன்னர்களே! பெருஞ் : ஆமாம்! வாதவூரரே! நீங்கள் புறப்பட்டு வந்த பிறகு மதுரைக்கு வந்த செய்தியும் அதுதான். மாணி : இல்லையே! நம் காவலர் நன்கு விசாரித்துத்தானே வந்தார்கள். சரி, நானே நேரில் சென்று விசாரித்து வருகிறேன். • பழகி : இதற்காக நீங்கள் பேர்கவேண்டுமா? நாங்கள் இரு வரும் தக்க சான்றுகளுடன் தானே சொல்லுகிருேம். எங்கள்மேல் நம்பிக்கையில்லையா? - மாணி : இல்லை! இல்லை! அப்படியில்லை! சரி, நீங்கள் சொல்லு வதையே கொள்ளுகிறேன். ஆலுைம், அது என்று வரும் என்று திட்டமாகத் தெரியவில்லை. அதுவரை இந்த அரசருடைய பெருஞ்செல்வத்தை நாம் வேறு பாதுகாக்க வேண்டுமே! பெருஞ் : ஆமாம்! அதுவும் உண்மைதான் (சற்றுச் சிந்தித்து) ஏன்? நீங்கள் இங்கேயே இருந்து குதிரையின் வருகை கண்டு வாங்க ஏற்பாடு செய்யுங்கள். விரும்பினல், நாங் கள் அரசனுடைய செல்வத்தைப் பாதுகாவலுடன் மதுரையில் சேர்க்கிருேம். - மாணி : அது முறையல்லவே! முத்திரையிட்டுக் கொண்டு வந்த பணத்தை முறைப்படி செலவிட வேண்டும். அல்லது நானே பண்டாரத்தில் ஒப்படைக்கவேண்டும். அதுதான் முறை. எனவே நானும் உங்களுடனேயே புறப்பட்டு வருகிறேன். பெருஞ் : ஏன்? எங்களிடம் நம்பிக்கையில்லையா? அவ்வளவு நம்பிக்கையற்ற அமைச்சராகவா ஆகிவிட்டோம்! எனக் காக இல்லாவிட்டாலும், இதோ உங்கள் ஊர்க்காரன்