பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 വഴി ജീവresi -உம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்.-இவனை நம்பியாயினும் தரலாகாதா? மாணி : இல்லை. அதற்காக இல்லை. என் கடமையை நான் சொன்னேன். அரச காரியங்களில் கடமை வழுவா திருப்பதுதானே நிலைபெற்று வாழ-நாட்டை வாழ வைக்க ஏற்றது. நீங்கள் இருவரும்-அதிலும் சிறப்பாக நீங்கள் முதலமைச்சர் பீடத்திலிருக்க வேண்டிய நீங்கள் -இருக்கும்போது ஐயம் எனக்கேது? பெருஞ் : (மெல்ல)-அதைத்தான் நீ கெடுத்தாயே பாவி! (வெளியே) சரி உங்கள் விருப்பம். மறுபடியும் குதிரைகள் வரும்போது நீங்கள் இங்கேயே இருந்தால் பார்த்து வாங்கிக்கொள்ளலாமே என்ற காரணத்தால் அப்படிச் சொன்ளுேம். நாட்டு நிலையும் உங்களுக்குத் தெரியும். குதிரைகள் இல்லை-எனவே வருவதை விடக்கூடாது. அதற்காக இத்தனை பெருஞ் செல்வத்தையும் இங்கே தேக்கி வைப்பதும் தவறு-தாங்கள் தலைமை அமைச்சர். எனவே, தங்கள் விருப்பம்போல எது வேண்டுமானலும் சொல்லுங்கள். நாங்கள் இதற்காகவா இங்கு வந்தோம்? எங்கள் பணி வேறு. நாங்கள் சென்று வருகின்ருேம். என்ன பழநிக் கொற்றரே! சரி வாருங்கள் நாம் போக லாம். - பழகி : ஆமாம் ஆமாம்! நாங்கள் போகிருேம். (பெருஞ்சாத்தன் வெளியே செல்கிருன்.) "மாணி நில்லுங்கள்! எனது இப்போதைய மனநிலையில் என்ன செய்வதென்றே புரியவில்லை. நீங்கள் சொல்லும் வழியும் சரியாகத்தானே இருக்கின்றது. என்ருலும் என் கடமை குறுக்கிடுகிறதே! - - பழகி : ஆமாம்-கடமை-கடமை என்று பின் எல்லாவற்றை யும் இழந்து அல்லல் உறுவதைக் காட்டிலும், இவர் சொன்னபடி பொருளை எங்கள் வழி அனுப்பிச் சற்று