பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4-காட்சி 1م-ضاfil3|وي மணி : நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே உன்னே ஓலமிட் டலறி உலகெலாந் தேடியும் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. யாண்டும் நீக்கமற நிறைந்து நின்ற இறைவோனே! உன் விளையாடலை யாவரே அறிவார்? மதுரைத் திருநகரில் தாங்கள் ஆடிய விளையாடல்களை எண்ணி எண்ணிப் பாடுவதன்றி வேறு என் செய்ய வல்லேன்! இப்போது நான் இரண்டும் கெட்ட நிலையில் உள்ளேனே! குதிரை களை விரைவில் அரசனிடம் ஒப்படைத்து, விடுதலை பெற்று, உன் புகழ்பாட வேண்டித் துடித்தேன். உன் ைேடு அழைத்துச் செல்லவேண்டும் என்று கூறியபோது என்னை இன்னும் இருக்க' எனப் பணித்தாய். ஆல்ை, எதற்கு இருக்க வைத்தாய்? என் செய்வேன் எந்தாய்? யாரே என ஆளவல்லார்? (காவலர் வர) வாருங்கள். என்ன? இப்ப்டியே பல நாட்கள் கழி கின்றனவே! என்ன செய்யலாம்? அரசனிடமிருந்து ஒன்றும் ஆண வரவில்லையே. உடனே புறப்பட்டுச் சென்று விடுவோமா? காவல் : அண்ணலே! நாங்கள் எல்லாத் துறைகளிலும் சென்று நன்ருக விசாரித்தோம். யாரும் குதிரை வருவ தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஊருக்குச் சென்ற அமைச்சரோ நம்மை இன்னும் சிலநாள் இருந்து வரு