பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1, காட்சி-4 - 49 மாறு பணித்துள்ளார். ஆனல் அரசருடைய ஆணையோ ஒன்றும் வரவில்லை. - மாணி : என் செய்வது! அரசர் பணியும் செய்யமுடியவில்லை; ஆண்டவன் பணியும் செய்ய முடியவில்லை. காவல .அண்ணுல்! அடியேன் ஆழ்ந்து நினைத்தேன். தங்கள் தெய்வ உள்ளத்துக்கு ஏற்ற ஒரு பணியை மேற்கொண் டால் என்னவென்று எண்ணுகின்றேன். இப் பரந்த வெளியில் தங்கட்கு ஆண்டவன் அருள்செய்த குருந்த மரத்தின் அருகில்-அந்த ஆண்டவனுக்குப் பெருங் கோயில் அமைத்தால் என்ன என்று தோன்றுகிறது. மாணி நல்ல எண்ணம்தான்! அப்படியே செய்யலாம். அதற் காக நான் தொடக்க நாள் முதல் சேர்த்த பொருள் அனைத்தையும் கொண்டுவரச் செய்யலாம். காவலரே! தங்கள் எண்ணம் சரியே. ஆயினும், அதற்கும் அரசனின் இசைவினைப் பெறுதல் நல்லது. எனவே இன்றே தக்க வரை அனுப்பி எனது பொருள் அனைத்தையும் இங்கே கொண்டுவரச் சொல்லுங்கள். அத்துடன் அரசனுக்கு அறிவிக்க வேண்டிய ஒலையையும். தந்து வரச் சொல் லுங்கள். அனைவரும் வாழ்த்தப் பணியைத் தொடங்க லாம். . . காவல அண்ணலே! அங்குச் சென்று ஆள் திரும்பும் வரை யில் நாம் இங்கே காத்திருக்க வேண்டியதில்லை. இங்கே தங்கள் பெருமையைக் கேள்விப்பட்ட பல பணியாளர் கள் இப்போதே கூடியுள்ளார்கள். அவர்கள் கூறிய திருப்பணிக் கருத்தையே நான் தங்கட்குத் தெரிவித் தேன். எனவே இன்றே நாம் திருப்பணி தொடங்கலாம். அதற்குள் தங்கள் பொருள் அனைத்தும் கொண்டுவரதங்கள் ஒலையை அரசரிடம் தந்துவரத் தக்கவர் ஒருவரை மதுரைக்கு அனுப்பி வைக்கிறேன். பல நல்ல பணியாளர் கள் தங்கள் வாய்ச்சொல்லுக்கு வெளியே காத்திருக் கிரு.ர்கள். வ.-4