பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. வழுவிலா மணிவாசகர் மாணி : அப்படியா உங்கள் விருப்பமும்மக்கள் பேராவலும் அதுவாயின், அப்படியே உடன் பணி தொடங்க ஏற்பாடு செய்யலாம். எனினும், எல்லாப் பணியாளர் கள் பெயர்களையும் குறித்து, அவரவர் பணிக்குத் தக்க படி ஊதியத்தையும் பிறவும் தர ஏற்பாடு செய்யுங்கள். கலைஞரும் பணியாளரும் உள்ளம் வருந்தாது பார்த்துக் கொள்ள வேண்டும். - காவல : அப்படியே அண்ணுல்! பல கலைஞர்கள் தங்களைக் காணக் காத்திருக்கிரு.ர்கள். அவர்களை வரச் சொல்ல லாமா? மாணி : வேண்டாம். கலைக்கு மதிப்பளிக்க வேண்டாமா? நானே வந்து அவர்களைக் காண்கின்றேன். (வெளியே வருகிருர் பல கலைஞர்கள் கூடியுள்ளார்கள்.) கலைஞர் வணக்கம்! அமைச்சர் பெரும! வணக்கம் ஆண்ட வல்ை ஆட்கொள்ளப் பெற்றவரே! வணக்கம். மாணி : அன்பர்களே! போதும் நிறுத்துங்கள். உங்கள் வரவால் மகிழ்ந்தேன். உங்கள் ஆர்வத்தைச் இலர்வழி அறிந்தேன். கலைஞர் ஆம் ஆம்! அண்ணலே! நாங்கள் அனைவரும் பாண்டி நாட்டு இக் கீழ்ப்பதியில் வாழும் தமிழ் நாட்டுக் கலைகளை-சிறப்பாகச் சிற்பம், கட்டடம் முதலிய வற்றின் கலைநலங்களை-நன்கு அறிந்தவர்கள். தங்கள் தொண்டினையும் அரசியல் நெறியினையும்-முன்னமே அறிந்துள்ளோம். இங்கே தாங்கள் ஆண்டவனல் ஆட் கொள்ளப்பெற்ற பெருமையினையும் உணர்ந்தோம். எனவே, இங்கேயே என்றும் உங்கள் புகழ் நிலைக்கும்படி -எங்கள் பணி சிறக்கும்படி-ஒரு திருக்கோயிலை அமைக்கவும் திட்டமிட்டோம்.