பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1, காட்சி-5 53 கொண்டான் அவன். அங்கே அந்தப் பொருளைப் பெற முடியாமல் போய் விட்டது. அதற்கும் ஒரு வழி செய்யப் போகிறேன். பழகி சரி சரி! நீங்கள் இருவரும் மிகப் பொல்லாதவர்கள் ஐயா. ஆனல், இந்த உண்மையெல்லாம் அரசன் அறிந் தால் உங்களைத் தொலைத்தே விடுவான். பெருஞ் : தொலைப்பதாவது! அதற்குள் அந்த வாதவூரனை அடியோடு நானே தொலைத்துவிட்டு, முதலமைசனகி விட்டால்-என்னை யார் என்ன செய்ய முடியும்?. பழகி : பார்க்கலாம்? ஆமாம். இப்போது நீங்கள் எங்கே அரச வாயிலில் நின்று கொண்டிருக்கிறீர்கள்? பெருஞ் : நின்று கொண்டிருக்கிறேன? சென்று கொண்டிருக் கிறேன், பறந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லலா மையா. உடனே பாண்டிய மன்னனிடம் சென்று எல்லா வற்றையும் திரித்துச் சொல்லி, ஆத்திரமூட்டி, வாத வூரனை அடியோடு தொலைக்க வேண்டியனவற்றைச் செய்ய வேண்டாமா? பழநி : ஏய் ஏய்! நானும் வாதவூரயிைற்றே! பெருஞ் : உம்மைச் சொல்லுவேன! நீரும்தான் இவற்றை வெளியில் சொல்லுவீரா-என் மைத்துனி-அந்த மேனகை உமக்கையா! பழகி : ஆமாம்...ஆமாம்! ஒரு நாளாவது என்னை அவளிடம் பேசவிட்டால்தானே! பெருஞ் : கவலைப்படாதீர்; காலம் வரும்! இதோ இப்போது எனக்கு நல்ல காலம் ஐயா! பழகி 1. எப்படி? பெருஞ் : இப்போது அரசன் அந்தப்புரத்தில் இராணியோடு ஏதோ மாறுபட்டுப் பேசிக் கொண்டிருக்கிருளும். இப் போது நாம் சென்று சொன்னல், அப்படியே பிடித்துக் கொள்ளும் தெரியுமா?