பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1, காட்சி-5 55 பாண்டி : நினைத்து? ஏன் தயங்குகிருய்? என்ன நடந்தது? எல்லாவற்றையும் விவரமாகச் சொல். முன்னமேயே குழம்பியுள்ள என்னை மேலும் குழப்பாதே. பெருஞ் : சமயம் அறியாது வந்துவிட்டேன்; மன்னித்தருள்க! பாண்டி : இல்லை! நீ சொல்லவேண்டியதைச் சொல்லலாம்! பெருஞ் : நமக்கு இன்னும் குதிரைகள் பெருந்துறையிலிருந்து வந்து சேரவில்லை. - பாண்டி : ஆமாம், அறிவேன்! பெருந்துறையில் இன்னும் குதிரைகள் வந்து சேரவில்லை என அறிந்தேன். - பெருஞ் : മ്ലങ്ക அரசே! தவறு வேறு இடத்தில் நேர்ந்து விட்டது. பாண்டி : என்ன சொல்லுகிருய் பெருஞ்சாத்தா? சற்று விளக்கமாக எடுத்துச் சொல்! ஏன் மேலும் குழப்புகிருய்? பெருஞ் : இல்லை! குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் குதிரை வாங்க முயற்சி செய்யவில்லை. பாண்டி : பின்னே! பெருஞ் : தங்கள் செல்வமனைத்தையும் மண்ணுக்கும் கல்லுக் கும் சுண்ணும்புக்குமாகப் பாழ்படுத்துகிரு.ர். பாண்டி : மறுபடியும் குழப்பாதே! நேராகச் சொல்! நல்ல வாதவூரர் நாட்டுக்குத் தேவையானதே செய்வார். பெருஞ் ஆம்! தற்போது நாட்டுக்குத் தேவை நல்ல குதிரை களே! பாண்டி : உண்மை. அதற்காகத்தானே அவரை அனுப்பி ளுேம். பெருஞ் : ஆல்ை, குதிரை வாங்கச்சென்ற பொருள் அனைத்தையும் கோயில் கட்டப் பயன்படுத்துகிரு. ர் அரசே! தேவையான குதிரைகளை விடுத்து......