பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வழுவிலா மணிவாசகர் பாண்டி : என்ன நம் பணத்தைக் கொண்டா? நல்ல பணி தான்! - பெருஞ் ஆம்! நல்ல பணிதான். ஆஞ்ல் குதிரைகள் மிக இன்றியமையாது உடன் தேவையல்லவோ? அன்றியும் தங்கள் உத்தரவு இன்றிப் பணியா? பாண்டி : அது உண்மை! ஆம், வாதவூார் சமயப்பற்று உடையவர்தாம். பெருஞ் : பற்று, தற்போது வெறியாக மாறிவிட்டது. பாண்டி : அது கூடாதுதான். பெருஞ் : அதைத்தான் நான் சொல்ல வந்தேன். அச் சமயப் பற்று வெறியான காரணத்தால், அவர் எல்லாக் கடமை களையும் மறந்து, கோயில் கட்டிக்கொண்டே, தங்கள் பண்டார முழுவதையும் காலியாக்கத் தொடங்கிவிட் டார். தாங்கள் குதிரை வாங்கக் கொடுத்தனுப்பிய பணம் போதாது என்று, தாங்கள் கொடுத்த அதிகாரத் தின் பேரில், மேலும் இங்கிருந்து பொருளைக் கொண்டு செல்கின்ருர். பாண்டி : என்ன? அப்படியா? பெருஞ் ஆம்! அந்தப்பணம் இன்னும் பெருந்துறை சென்று சேர்ந்திருக்காது. நீங்கள் தற்போது விரைந்து நட வடிக்கை எடுத்தால், எல்லா உண்மைகளும் புலவை தோடு, அப் பொருளும் திரும்பும். பாண்டி : (சீற்றம்ாக) நம்பிக்கைத் துரோகம்! எனினும் நல்லதே. சரி, பெருஞ்சாத்தரே! நீரே இதற்கு என் னென்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து உடனே நடவடிக்கை எடுத்து என் கைச்சாத்துக்குத் தயாராக வையும். பெருஞ் : தங்கள் உத்தரவுப்படியே. (வெளிவருகிருன்) (தனிமொழி) எண்ணியது முடித்தேன். மன்னவன்