பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1, காட்சி-5 57 மனம் மாறிவிட்டான். இனி நான் வைத்ததுதான் சட்டம். என்ருலும், இவனும் சமயப்பித்துப் பிடித் தவன்; அவனிடம் நீங்காத பற்றுடையவன். எனவே, அவசரப்பட்டு எந்தக் காரியத்தையும் செய்துவிடக் கூடாது. எண்ணிப் பார்க்கலாம். வஞ்சுளத்தின் யோசனைகள்தாம் இப்போது நமக்குப் பெருந்துணை புரியும். மற்றும் அரசனிடம் பெற்ற வெற்றியைக் கேட்டால் அவள் எவ்வளவு மகிழ்வாள். உடன் அவளிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லவேண்டும் -பிற்கே மற்றவை.