பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2 காட்சி-1 (பெருந்துறையில் மக்கள் மணிவாசகர் பணி கண்டு மகிழ்ச்சி கொள்ளுகின்றனர். ஆளுடையான், மணி கண்டன் இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.) ஆளு : என்ன தம்பி, வரவர மக்கள் கூட்டம் இப்படிப் பெருகி வருகின்றதே. மணி : பெருகாமல் என்ன செய்யும் அண்ணே? அந்த மனிதர் எப்படித் தம்மை மறந்து கடவுளுக்குத் தொண்டு செய்கிருர் பார்க்கிருயல்லவா? நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் இப்படி மக்கள், நீ, நான்' என்று போட்டியிட்டுக்கொண்டு வருவதை எப்போதா வது பார்த்திருக்கிருயா? அதுவும் கூலி ஒன்றும் வேண்டா மலேயே வெறும் உணவும் உடையும் இருக்கையும் பெற்றே தொண்டு செய்ய வருவதை நினைத்தால், நாம் நம் ஊரின் பெருமையையும் இப் பெருமையைத் தேடித் தந்த அவரையும் பாராட்ட வேண்டாமா? அண்ணே! அவர் பெயர் இப்போது உனக்குத் தெரியுமா! ஆளு : . ஏன் தெரியாமல்? மக்கள் வாயெல்லாம் மாணிகக் வாசகர் என்றல்லவா அவரை அழைக்கின்றன. ஆகா! அந்தப் பெயருந்தாம் அவருக்கு எவ்வளவு பொருத்த மாக உள்ளது! மணி : ஆமாம்! அப் பெயா அவருக்கு ஆண்டவனல் இடப் பட்ட பெயரல்லவா! ஆண்டவன் யாரை இப்படிப் போற்றிப் புகழ்ந்தார்? உலகம் இதுவரை காதை புதுமையல்லவா நாம் இன்று நம் கண்முன் காண் கின்ருேம்!