பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வழுவிலா மணிவாசகர் தார். எனக்கு அந்த நாட்கன் நினைத்தாலும் நடுக்கம் உண்டாகின்றதே. இவர் இங்கு வந்திராவிட்டால் நாமெல்லாம் ஊர் விட்டே ஓடவேண்டியிருக்குமே. மணி : உண்மை அண்ணு! இவர் பரம்பரையான அமைச்சர் குலத்தில் பிறந்தவர் அல்லவா! அந்த அமைச்சர் குலத் தைத் தானே அமாத்தியர் குலம்’ எனக் கூறுகின்ருர் கள். அந்த நல்ல பரம்பரைக் குணத்தோடு, இவர் சிறந்த கலாவிற்பன்னராக இருந்ததோடு, பல சாத்தி ரங்களைப் பயின்றதோடு, கடவுள் உணர்வும் பெற்றவ ரானதினலேயே-எல்லாவிடத்தும் எல்லா உயிர்களி டத்தும் இரக்க குணம் காட்டுவதனலே, நம் நாட்டில் மட்டுமின்றி, பிற சோழ, சேர, தொண்டை நாடு களிலும் இவர் புகழ் நன்கு பரவி வளர்ந்து வந்துள்ளது எனக் கேள்விப்படுகிருேம். நேற்றுத் தொண்டை நாட் டிலிருந்தும் காஞ்சியிலிருந்தும் இங்கு வந்த வணிகர்கள் இவர் புகழைப் பாடிப் பாராட்டியதை நானும் சிலரும் கேட்டு வியந்தோமே! ஆளு ஆம்! உண்மைதான். நானும் கேள்விப்பட்டிருக் கிறேன். உற்ருர், உறவினர், மக்கள், மனைவி என்ற யாதொரு பற்றுமின்றி இவரைப்போல் யார் ஒடியாடி நாட்டுக்குப் பாடுபட்ட நல்லவர் இதுவரை வரலாற்றில் இருக்கிருர்கள்? தமக்கென ஒன்றுமில்லாது, இதோ தாம் பெற்ற-ஊதியமாகப் பெற்ற-எல்லாவற்றையும் கொண்டு வந்து ஆண்டவன் கோயிலுக்கு என்றே செலவு செய்கின்ருரே. மணி : அதுமட்டுமன்று மக்கள் அனைவரும் ஆண்டவன் குழந்தைகளே என்று அவர் பாராட்டும் பண்புதான் என்னே! எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தமமை மறந்து கண்ணிர் பெருக்கெடுத்துப் பாடும்போதுதான் கேட்போருக்கு எத்தனை உணர்ச்சி உண்டாகின்றது, அதோ தூரத்தே சொல்லரசு வருகிருரே