பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, am fl—1 61 ஆளு ஆம் ஆம் (சொல்லரசு அருகில் வர) இருவரும் : வணக்கம். சொல் : வணக்கம்! வணக்கம். என்ன இருவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? மணி : ஒன்றுமில்லை. எல்லாம் நம் மணிவாசகர் புகழ் பற்றித்தான். அவர் புகழ் பேசாத நாள் பிறவாத நாளோ என்னுமாறு மக்கள் உணர்ந்துகொண்டார் களே! சொல் : உண்மைதான். ஆனால், நான் இரண்டு நாட்களுக்கு முன் மதுரை சென்று வந்தேன். அங்கே அந்தப் பெருஞ் சாத்தனும் அவன் கூட்டமும் இவருக்கு எதிராகப் பெருஞ்சதி செய்வதாகக் கேள்விப்பட்டேன். இவர் அங்கு இல்லாததும், இங்கே இறைபணி செய்வதும், இவர் புகழ் நாடெங்கும் உலகெங்கும் பரவுவதும், பாண்டிமன்னனுக்கும்கூடக் கசப்பாகின்றது என்னுமாறு மக்கள்பேசிக் கொள்ளுகிறர்கள். அதற்கேற்ப அத் துன் மந்திரி அரசரைத் தனிமையில் கண்டு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மன்னவன் மனத்தை மாற்றுகின்ருளும். - ஆளு : இருக்கலாம். மன்னவன் இவரிடம் பெருமதிப்பு வைத்திருப்பவயிைற்றே. அவ்வளவு எளிதில் அவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டான் என்று நம்புகிறேன். மணி. ஏன்? கரைப்பார் கரைத்தால்-அதில் புகழ் பற்றிய பொருமை வேறு அவனுக்கு வருமல்லவா? அவனும் மனிதன்தானே. சொல் : அது மட்டுமன்று இன்னென்று முக்கியம். இங்கே இவர் கோயில் கட்டுவதற்குப் பாண்டியன். குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைச் செலவிடுகிருர் என்ற குற்றத்தை வேறு சுமத்தியிருக்கிருர்கள்.