பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வழுவிலா மணிவாசகர் ஆளு : என்ன? இது என்ன கொடுமை? அந்தப் பணத்தை அந்தப் பாவி பெருஞ்சாத்தனும் அவன் நண்பன் பழநிக் கொற்றனும் வந்து சென்றபோது அல்லவா வாங்கிச் சென்ருர்கள்! இது இவருடைய செல்வமல்லவா! சொல் : உண்மைதான். நமக்கெல்லாம் தெரிகிறது. ஆனல் எப்படி நிருபிக்க முடியும்? அதைப் பெற்றுச் சென்ற அவனேதான் மன்னனிடம் இப்படி மாற்றிக்கூறி. இவர் மேல் பழிதீர்த்துக் கொள்ளத் துடிக்கிருன். மதுரை மக்களுக்கு இவ்வுண்மை தெரியாவிட்டாலும், அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிருன் என்பதுமட்டும் நன்கு புரிந்து விட்டது. என்ருலும் மன்னன் இவரிடம் கொாண்ட பற்றில் குறைந்தவனகி ஏதோ இவருக்கு உத்தரவு அனுப்பிவிட்டதாகக் கேள்வி. மணி : இருக்கும்; இருக்கும். சில நாட்களுக்கு முன் நான் சென்ற போதே இதுபற்றி மக்கள் தெளிவில்லாமல் ப்ேசிக் கொண்டிருந்தார்கள். இந்தக் குற்றத்தைகுதிரை வாங்க வந்த பணத்தைக் கொண்டு அரசன் அனுமதியில்லாமல் இங்கேயே தங்கிக் கோயில் கட்டும் குற்றத்தை இவர் மேலேற்றி, இவ்ரை அமைச்சர் பதவியி லிருந்து விடுதலை செய்துவிட முயற்சிகள் நடைபெறு கின்றன என அறிந்தேன். ஆளு அட பாவிகளா! நல்லவர்களுக்குக் காலம் இல்லையா? சொல் எப்படி இருக்கும்? என்று இருந்தது. இன்று இருப் பதற்கு? மணி : ஆமாம் உண்மைதான். அந்தப் பெருஞ்சாத்தன், பர்த்தை வஞ்சுளம், பழநிக் கொற்றன் ஆகிய மூவரும் சூழ்ந்து செய்யும் வஞ்சகம் நல்லவரை ஆட்டிப்படைக் கின்றது. அரசனும் அவர்கள் பக்கம்-ஏன்!-அவனுக்கு எடுத்துரைப்பார் இல்லையா!