பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-1 63 சொல் : இருந்தாலும் இறுதியில் உண்மைவெளிப்படாமலா போகும்? பார்க்கலாம். நாட்டுமக்கள் அறிவார்கள் இவர் நிலையை-பணியை-தொண்டினை-நேர்மையை. எனவே வஞ்சகத்தார் வஞ்சகம் நிச்சயம் வெளியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவன்-தாமே வந்து ஆட்கொண்ட அந்த உத்தமன்-இருக்கும் வரையில் நாம்--ஏன்?-உலகமே அஞ்ச வேண்டுவதில்லையே! ஆளு உண்மைதான். ஆனல் அந்தப் பாவிகள் கடவுளுக் 'கும் அஞ்சாதவர்களாயிற்றே! சொல் : இருக்கட்டும். அவர்களை நீள விட்டே ஆண்டவன் புத்தி புகட்டுவார்-அன்றி அழித்தொழிப்பார். ஆம்! அவர்களாலே கொடுமை என்றும் வாழாது’ என்ற உண்மை வெளிவராமலா போகும்? ஆளு : ஆம்! பார்க்கலாம். ஆண்டவன் ஒருவனே வருங் காலத்தில் நம்மையும் வாழவைப்பான். மணி நல்லவர் புகழ் என்றும் வாழ, அல்லவர் மண்ணுேடு மண்ணுய் மடிய வகை செய்து, வையத்தைக் கொடுமை யினின்னு காப்பான்-சரி, நாம் செல்வோம்.