பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-2 65 பெருஞ் : யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லாம் முடி வாகிவிட்டது. இனி அவன் ஒழிந்தான். அவன் மதுரைக்கே வர மாட்டான். வந்தால் சிறைக் கைதி யாகத்தான் வருவான். ہی۔ வஞ்சு : ஆமாம்! உங்கள் சாமர்த்தியமே சமார்த்தியம். ஆனல் அவனுடைய புகழையும் சிறப்பையும் கோயில் பணியையும் மக்கள்-ஆண்களும் பெண்களும்-எப்படிப் புகழ்ந்து பேசுகிருர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெருஞ் எனக்குத் தெரியுமாவது? அரசனுக்கே தெரியுமே. வஞ்சு : ஐயையோ! அப்புறம் மனம் மாறிவிடுவாரே! பெருஞ் : அதுதான் @మడి). அதுவே மன்னனை என் பக்கம் இழுக்கப் பயன்படுகிறது. வஞ்சு : 67676T? பெருஞ் : ஆமாம் அவன் புகழ் கேட்டு மன்னன் பொருமு கிருன். யாருக்குத்தான் புகழில் ஆசையிருக்காது? அது வும் நான் போட்ட தூபத்தில் அரசன் இந்த வாத வூரான உடனே ஒழிக்கவேண்டும் என்கிருன். அரசன் பணத்தை வஞ்சமாகக் கையாண்டு தனக்குப் பேரும் புகழும் தேடிக் கொள்ளுகிருன் என்று சொன்னதும், அரசன் எவ்வளவு கோபம் கொண்டான் தெரியுமா? உடனே குதிரைகள் வரவேண்டும்' என்று உத்தரவு போடச் சொன்னன். நான் அதையும் இல்லாததையும் சேர்த்துத் தயார் செய்து, எப்போதோ பெருந்துறைக்கு ஆள் அனுப்பி விட்டேன். வஞ்சு : ஆமாம், அது இருக்கட்டும். இரண்டாவது, அவன் சொந்தப் பொருளை எடுத்துச் சென்றதைத் தடுத்து நிறுத்த மன்னவன் ஆணைப்படி ஆள் அனுப்பினதாகச் சொன்னீர்களே, அது என்னவாயிற்று? வ.-5