பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வழுவிலாமணிவாசகர் பெருஞ் ஆம் அதில்தான் நான் சற்றுப் பிந்திவிட்டேன். என்ருலும், அதைப்பற்றி அரசன் ஒன்றும் கேட்கவில்லை யாதலால் அப்படியே விட்டுவிட்டேன். இந்த முயற்சி யில் என் வெற்றியைப் பார்க்கப் போகிருயே. (தூரத்தே பழநிக் கொற்றன் வருகிறன.) இவன் எங்கே இப்பொழுது வருகிருன்? வஞ்சு : வரட்டும்! வரட்டும்! பார்த்துக்கொள்ளலாம். பெருஞ் : வா அப்பனே வா! பழகி வணக்கம் அண்ணு! பெருஞ் : என்ன செய்தி? எங்கே இப்படிப் புறப்பட்டாய்? பழகி : ஒன்றுமில்லை. எல்லாம். நாம் எண்ணியபடியே நடக் கின்றது. என்ருலும், நேற்று, பெருந்துறையிலிருந்து வந்த ஒர் ஆள் மூலம் வேருெரு செய்தியும் கேள்விப்பட் டேன். இருவரும் : என்ன? என்ன அது? பழநி ஒன்றுமில்லை. எங்களுரான் தானகவே இந்த வேலையை விட்டுவிடப் போவதாகவும் அதற்கேற்ற ஒலையை மன்ன னுக்கு அனுப்பிவிட்டதாகவும் அங்கே பேசிக்கொண் டார்களாம். பெருஞ் இருக்காது! இருக்காது யாரோ நமக்காகக் கட்டி விட்டிருப்பார்கள். நாம் ஏமாந்து வாளா இருக்கக் கட்டிய கதையாக இருக்கலாம். அதை உண்மை என்று நம்பிவிடாதே. வஞ்சு : ஆமாம்! ஆமாம் இருக்கலாம். மேலும் இந்த மக்கள் அவனிடம் ஏதோ வெறிகொண்டு-அதைப் பக்தி என்று சொல்லிக்கொண்டிருப்பதால், இப்படிக் கட்டி-நம்மை மயங்க வைப்பார்கள். -