பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி-2 67 பழகி : இல்லை! தக்கவர் மூலமே அறிந்தேன். அவர்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் சென்று வந்தார். அவர் சொன்னர். அத்துடன் தான் யாருக்கும் அடிமை இல்லை என்றுகூடப் பாடுகிருளும். வஞ்சு : அவ்வளவு தூரம் வந்துவிட்டதா? அந்தப் பாட்டு உனக்குத் தெரியுமா? கொண்டு வந்திருக்கிருயா? பழகி இல்லாமலா வெறுங்கையுடன் வருவேன். அதுவும் உங்களிடம்-ன்மத்துனியிடம்... வஞ்சு : ஒய்! வாயை மூடும். உறவுகொண்டாடுவது அப்புறம் இருக்கட்டும்; அந்தப் பாட்டைக் காட்டும். பழகி : அப்போது உறவு இல்லையா? வஞ்சு : என்ன பயித்தியம் மாதிரிப் பேசுகிறீரே உறவு இல் லாமலா.இவ்வளவும்? என் தங்கை யென்ன! (மெல்லகாதில்) நான் வேண்டுமானலும்-முதலில் அந்த ஒலையை எடும். பழகி ஆமாம் நீங்கள் நன்ருகப் பாடுவீர்கள் அல்லவா? இதோ அந்தப் பாட்டு-பாடுங்கள் பார்க்கலாம். வஞ்சு : ஒலையை வாங்கிப் பாடுகிருள் தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ ய்ைநின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்கும் குடியல்லோம் யாது மஞ்சோம் மேவிளுேம் அவனடியார் அடியா ரோடும் . மேன்மேலும் குடைந்தாடி ஆடுவோமே. பழகி : பேஷ் பேஷ்! நன்ருக இருக்கிறது.