பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2 காட்சி-3 மணி : பெருநீர் அறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்! வியன் கங்கைபொங்கி வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணிவடி வின்வெள்ளை குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமண்ணியே! கங்கை சடைக்கரந்த கண்ணுதலே! எங்கோ குதிரை வாங்க வந்த என்னை வா' என்று உன் கருணையால் அழைத்து அருட்கருணை காட்டிக் குருந்தமரத்து நிழலில் ஆட்கொண்டாய். ஆனல் அப்படியே என்னை அணைத்துக் கொள்ளாது விட்டுவிட்டாயே! அடியோடு கைவிட்டு விடுவாயோ! வேண்டாம் அண்ணுல் ஏற்று அருள் செய் வாயா? ஏதோ எனக்கு இன்னும் உலகில் பணி உண்டு என்ருயே! அது இந்தக் கோயில் பணிதானே? ஆம். என் வாழ்நாளில் நான் பெற்ற பொருள் அனைத்தும் உன் ஆலயத் திருப்பணிக்கு உரித்தாக்கிவிட்டேன். பொன் னும் மெய்ப்பொருளும் நீயான பிறகு இப் பொன்னையும் பொருளையும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். இதோ அனைத்தும் உன் அழகார் திருப் பணிக்கு உரியனவாய் அமைந்து கோயில் வளர்ந்து வருகின்றதே! இதோ இன்னும் சில நாட்களில் திருக் கோயில் பணி நிறைவு பெற்றுவிடும். இதனினும் மனிதப் பிறவியில் பெறும் பேறு வேறு யாது உளது? இதில் தொண்டு செய்யும் பணியாளர்கள்தாம் எத்துணை உறுதி யோடும் அன்போடும் ஊக்க உணர்வோடும் தொண்டு செய்து இப்பணியை விரைவில் முடித்துக் கொடுக்க முன்