பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வழுவிலா மணிவாசகர் நிற்கின்றனர். ஆம்! அதன் வளர்ச்சி என் உள்ள வளர்ச்சி ஆகிறது-சமய வளர்ச்சியாகிறது மக்கள் மன வளர்ச்சி யாகின்றது. இந்தப் பாண்டி நாட்டில்-இந் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கணும் வாழும் மக்களுக்கு இக் கோயில் என்றும் எடுத்துக்காட்டாக நின்று நிலக்குமே! ...ஆனல்...ஆம்! ஆனல் ஆட்கொண்ட இறையோனே! நான் உனக்கு அடிமையாயினும், இன்னும் பாண்டிய மன்னனின் பணியாள் என்ற பெயரிலிருந்து விடுதலையாக வில்லையே. நான் விடுதலை கோரி விடுத்த விண்ணப்பத் திற்கு உரிய பதிலும் கிடைக்கவில்லையே. மேலும், அவன் இட்ட னி இன்னும் முடிவு பெறவில்லையே. குதிரை களைக் கொண்டு சேர்த்தபிறகு அல்லவா என் கடமை முடிவுற்றதாகும்? இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பாக அன்ருே இன்று நான் இருக்கிறேன். குதிரைகள் என்று வரும் என்பது தெரியவில்லையே? ஆண்டவனே! உன் சோதனையை நீட்டிக்காதே! நான் பாண்டி மன்ன னிட்ம் குதிரையைச் சேர்க்க உதவிசெய்ய வேண்டுவது உன் கடமையாகும். அவன் செல்வத்தை அவனுக்கே அனுப்பிவிட்டேனயினும் மன நிறைவில்லையே. அத்துடன் நேற்று'மதுரையிலிருந்து வந்த ஒற்றர்கள் அப் பணம்குதிரைக்கென வந்ததை திருப்பி அனுப்பிய அச் செல்வம். -அரசப் பண்டாரத்தை அடைந்தமைக்குச் சான்று ஒன்றும் இல்லை என்றல்லவா சொல்லுகிருர்கள்? ஒரு வேளை அதுவும் உண்மையாயின் யாரை நோவது? யாரை ஐயமுறுவது? எல்லாம் உன் கடன் என்று இருப்பினும் பாண்டியனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என எண்ணும்போது அஞ்சவேண்டியுள்ளதே! கடமையும் அதுதானே (சற்று நின்று நினத்து)-ஆம் நான் ஏன் அஞ்ச வேண்டும்? -