பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2 காட்சி-4 (மாணிக்கவாசகர் அடியவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிரு.ர்.) - நல்ல அன்பர்களே! மெய்த்தொண்டர்களே! உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். ஆண்டவன் திருப்பணி முடிய் நீங்கள் மேற்கொண்ட அளப்பருஞ் செயல் எண் ணிப் பார்க்க முடியாதது; நாவால் புகழ்ந்து சொல்ல முடியாதது; நாட்டில் என்றென்றும் மங்காது மலர்ந்து உயர்ந்து சிறந்து வாழப்போவது. இக் கோயில் பணி தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல பாகங்களிலும் பரந்து சென்று சிறக்கப் போகின்றது என்பதை வருங் காலம் காட்டும். திருப்பணியோ முடிந்துவிட்டது. ஆண்டவனைக் கோயிலுள் இருத்தி மகிழ்ந்தோம். இனி நான் அவன் புகழ் பர்டி, உங்கள் அனைவரிடமும் விடை பெற்று, பாண்டியனுக்கு நான் ஆற்றவேண்டிய கடமை யினையும் முடித்து ஊர்தோறும் இத்தகைய திருப்பணி கள் செய்ய வேண்டிய வகையில் யாத்திரை செய்வேன். அப்போதும் தங்கள் உதவி தேவைப்படும் என எண்ணு கின்றேன். இன்னும் சில நாட்கள் இருந்து குடமுழக்கு விழாவையும் முடித்துச் செல்லுங்கள். அதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் விரைந்து நடைபெறுகின்றன. அனைவரும் : அப்படியே. எனினும் தங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாதவராகின்ருேம். தங்கள் தித்திக்கும் மணி வார்த்தையைக் கேட்க முடியாமல் போகுமே எனக் கவல்கின்ருேம். மாணி : இருக்கலாம். எனினும் உங்களுக்கென்று கடமை கள் உள்ளன, குடும்ப வாழ்க்கை நிலை உள்ளது. உலகம் உங்களைப் போன்ற நல்லவர்களால்தான் ஓங்கவேண்டும். நானும் உங்கள் மத்தியிலேதான் இந்த நாட்டில் உழலப்