பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2, காட்சி –4 73 போகிறேன். கவலை வேண்டாம். சென்று பணிகளைக் கவனியுங்கள். (அனைவரும் செல்ல, வாயிற் காவலன் உள்ளே வருகிருன்.) காவல் : அமைச்சர் பெருமl பாண்டி மன்னன் அனுப்பிய தூதன் வாயிலில் வந்துள்ளான். ஒலை கொண்டு வந்துள் ளான். மாணி : வரச் சொல். அப்படியே நம் முதற் பணியாள ரையும் ஒலை வாசிப்போனையும் வரச்சொல். காவல் : அப்படியே! - (அவன் செல்லத் தூதன் வருகிருன்.) தூது : அமைச்சர் பெருமானே! அடியேன் வணக்கம். மாணி : வருக! வருக! தூது ஏழ்பிறப்படியேம்! வாழ்க நும் அமைச்சு! அண்ணலே! தாங்கள் மதுரையை விட்டுப் பிரிந்தபின் நாங்கள் தாய் இழந்த கன்றெனத் தவிக்கின்ருேம் அன்று நாட்டில் எத்தனையோ கொடுமைகள் நடந்தனவாக வரலாற்றில் படிக்கின்ருேம். மாணி : ஆமாம்! ஆனல் இன்று அதற்கென்ன? தூது : இன்று-ஆம்! இன்றும்-அந்தக் கொடுமை மங்க வில்லை. அக் கொடுமை ஏற்ற தூதுவகை நான் அமைந் ததை எண்ணி வருந்துகிறேன். மாணி : ஐயா! ஏன் கவலைப்படுகிறீர்? வந்த தூதின் பொருள் என்ன? ஒலை கொண்டு வந்திருக்கிறீர்களாமே. அதைத் தாருங்கள். (துதுவன் ஒலை நீட்ட, முதற் பணியாளரும் ஒலை வாசிப்போனும் உள்ளே வருகின்றனர்.) வாருங்கள்! வாருங்கள்! இதோ பாண்டி மன்ன ரிடத்து இருந்து ஒலை வந்துள்ளது. (வாங்கி ஒலை வாசிப்போனிடம் தருகிரு.ர். இருவரும் உட்காருகின்றனர்.)