பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. வழுவிலா மணிவாசகர் ఇడిణuు பிரித்து வாசியும். ஒலை வாசி : ஐயா! வணக்கம். தங்கள் ஆணைப்படி ஒலையை வாசிக்கிறேன். . (ஒலைக் கட்டை அவிழ்த்துப் படிக்கிருன்.) "வாதவூரராகியமுதல் அமைச்சராக இருந்தவருக்கு" பாண்டி மன்னன் விடுக்கும் ஒல. நீர் நமது பண்டாரத்தி லிருந்து உமது விருப்பப்படியே வேண்டிய பொருளை எடுத்துக்கொண்டு குதிரை வாங்கப் பெருந்துறைக்குப் புறப்பட்டீர். எமது உத்தரவு மிக விரைவில் குதிரைகளே வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்பது. நமது நாட்டு நிலையையும், சுற்றியுள்ள பெருமன்னரும் நம் கீழ் உள்ள சிறு மன்னரும் எப்போது நம்மை ஆழ்த்தலாம் எனத் திட்டமிடுவதையும் என்னிலும் நீர் நன்கு அறிவீர். குதிரை இல்லாத குறையை ஒற்றர்வழி மற்றவர் அறியுமுன், நமது கொட்டில்கள் நிரம்ப வேண்டும் என்பதையும் நீரே எமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறீர். நீர் எவ்வளவு பொருள்கொண்டு சென்றீர் என்பதும் எனக்குத் தெரியாது. நான் உம்மை முற்றவும் நம்பினேன் என்பதையும் நீர் அறிவீர். இருந்தும், நீர் இப்போது செய்யும் செயல் சற்றும் சரியானதாகத் தெரியவில்லை. நீர் சென்று எத்தனையோ நாட்களாயின. குதிரையைப் பற்றிய தகவல் ஒன்றுமே இல்லை. நீரோ நாட்டையும் கடமையும் மறந்து ஏதோ வேறு வேலையில் உள்ளதாக ஒற்றர் மூலம் அறிகிறேன். எமது பண்டாரத்தே இருந்து எடுத்துச் சென்ற பொருளை எம் உத்தரவு இல்லாமலே வேறு வேலைக்குப் பயன்படுத்துகின்றீர் என்பதையும் அறிவேன். இந்த ஒலையைக் கண்டவுடன் குதிரைகளுடன் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் இங்கு வந்து சேர வேண்டும். இது என் ஆணே பாண்டி மன்னன் ஆணையை மீறியவர் யாரும் வாழ்ந்ததில்லை என்பதை நீர் நன்கு உணர்வீர்! எனவே பதினைந்து நாட்களுக்குள் இங்கே உம்மைக் குதிரைகளுடன் எதிர்பார்க்கிறேன். அப்படி